நயன்தாராவின் 'பியாண்ட் தி ஃபேரிடேல்' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் 37 வினாடிகள் காட்சிகள் இருப்பதாக அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்..
நயன்தாராவின் திருமண ஆவணப்படமான 'பியாண்ட் தி ஃபேரிடேல்' படத்தின் காப்புரிமைப் பிரச்சனையால் சர்ச்சையை எதிர்கொண்டது, 'நானும் ரவுடி தான்' படத்தின் சில காட்சிகளை பயன்படுத்த தயாரிப்பாளரான தனுஷ் தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்ததால் தனது ஆவணப்பட வெளியாக தாமதமானதாக நயன்தாரா பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும் வெறும் 3 விநாடி காட்சிகளுக்கு தனுஷ் ரூ.10 கேட்டு நோட்டீஸ் அனுப்பியதாகவும் நயன்தாரா கூறியிருந்தார். தனுஷை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார் நயன். தனிப்பட்ட வெறுப்பினால் தனுஷ் தன்னை பழிவாங்குவதாகவும் நயன்தாரா கூறியிருந்தார்.
இந்த சர்ச்சைக்கு மத்தியில் 'பியாண்ட் தி ஃபேரிடேல்' நவம்பர் 18 முதல் பிரபலமான டிஜிட்டல் தளத்தில் வெளியானது. மேலும் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டது.
மீண்டும் தனுஷை சீண்டி பார்ப்பது போல் நயன்தாரா வெளியிட்ட 3 பக்க அறிக்கை!
ட்ரோல்கள் மற்றும் சர்ச்சைகளுக்கு மத்தியில் 'பியாண்ட் தி ஃபேரிடேல்' சிறப்பாக கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் இந்த வீடியோவில் 'நானும் ரவுடி தான்' படத்தின் 3-வினாடி கிளிப்பிங் இல்லை, படத்தின் மேக்கிங்கில் இருந்து கிட்டத்தட்ட 37 வினாடிகள் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் சில நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை விமர்சித்தும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
How can use the video clips with out getting NOC sign from ?
Over 37 Seconds has been used ! It's completely illegal , There will be a legal move from Side .
Actress completely Lost her Respect . pic.twitter.com/qe2Bax6568
How did use over 37 seconds of footage without an NOC from ?
This blatant misuse is completely illegal! 👀
Expect a legal storm brewing from 's side soon!
Stay tuned for updates. 📢 Only … pic.twitter.com/l0xNwFlDyi
How did use over 37 seconds of footage without an NOC from ?
This blatant misuse is completely illegal! 👀
Expect a legal storm brewing from 's side soon!
Stay tuned for updates. 📢 Only … pic.twitter.com/l0xNwFlDyi
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய, 'பியாண்ட் தி ஃபேரிடேல்', ஆவணப்படம் நயன்தாராவின் விக்னேஷ் சிவனுடனான உறவு, அவர்களின் 2022 திருமணம் மற்றும் அவர்களின் இரட்டை மகன்கள் உயிர் மற்றும் உலகின் வருகை ஆகியவற்றை பற்றி பேசுகிறது. நயன்தாராவின் தொழில்முறை பயணத்தையும், சமீபத்திய படங்களையும் முன்னிலைப்படுத்துகிறது, மேலும் அவரது தனிப்பட்ட பயணம் அவரது காதல் முறிவுகள் மற்றும் ஆரம்பகால வாழ்க்கைப் போராட்டங்களை நினைவுபடுத்துகிறது. இந்த ஆவணப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் நாய் என அழைக்கப்பட்டாரா? – அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்!