Virat and Anushka Son : பிரபல கிரிக்கெட் வீரர் விராட் மற்றும் அவரது மனைவி நடிகை அனுஷ்கா ஆகியோரின் மகன் ஆகாயின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
பொதுவாக பெரிய நட்சத்திரங்கள் என்றாலே, அவர்களை மட்டுமல்லாமல் அவர்களது குடும்பத்தாரை பற்றியும் அறிந்துகொள்ள பலர் ஆர்வம்கொள்வார்கள். ஆனால் லோகேஷ் கனகராஜ் போன்ற வெகு சிலர் தங்கள் குடும்பத்தை இனமும் மீடியா பார்வையில் இருந்து விலக்கியே வைத்துள்ளனர். அந்த வகையில் அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்கள் குழந்தைகளான வாமிகா மற்றும் அகாயை ஊடகங்களின் கவனத்தில் இருந்து விலக்கியே வைத்துள்ளனர் என்றே கூறலாம்.
பெர்த்தில் நடந்து வரும் இந்தியா vs ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியின் சூழலுக்கு மத்தியில், ஒரு குழந்தையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் விராட் மற்றும் அனுஷ்காவின் மகன் அகாயின் முதல் புகைப்படம் இது தான் என்று கூறிவந்தனர். ஆனால் உண்மை என்னவென்று இப்பொது இந்த பதிவில் காணலாம்.
இசைவாணியை உடனே கைது செய்யணும்; இயக்குனர் மோகன் ஜி ஆவேசம்!
இந்த மாத தொடக்கத்தில், அனுஷ்காவும் விராட்டும் மும்பையில் தங்கள் பிள்ளைகள் வாமிகா மற்றும் அகாயுடன் சிறிது காலம் இருந்தனர். லண்டனில் உள்ள அவர்களின் புதிய இல்லத்திற்குத் திரும்பியபோது, கிரிக்கெட் வீரர் விராட் மற்றும் நடிகை அனுஷ்கா ஆகிய இருவரும் தங்கள் குழந்தைகளை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று ஊடகங்களிடம் அறிவுறுத்துவதைக் காண முடிந்தது. மேலும் வைரலான ஒரு வீடியோவில், விராட் தனது குழந்தைகள் பக்கம் கேமராவை திருப்ப வேண்டாம் என்று கூறியதும் குறிப்பிடத்தக்கது.
அனுஷ்கா மற்றும் விராட்டின் இரண்டாவது குழந்தையான அகாய், பிப்ரவரி 15, 2024 அன்று பிறந்தார். அவரது பிறப்பை அறிவித்து, அந்த தம்பதியினர் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், “மிகவும் மகிழ்ச்சியுடனும், அன்பு நிறைந்த இதயங்களுடனும், பிப்ரவரி 15 ஆம் தேதி அனைவருக்கும் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். , எங்கள் ஆண் குழந்தை அக்கா & வாமிகாவின் சிறிய சகோதரனை இந்த உலகிற்கு வரவேற்றோம்! எங்கள் வாழ்க்கையின் இந்த அழகான நேரத்தில் உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இப்பொது நடந்து வரும் கிரிக்கெட் போட்டியில் விராட்டை உற்சாகப்படுத்தும் அனுஷ்காவின் படங்கள் மற்றும் மைதானத்தில் இருந்து அவர்களின் கியூட் தருணங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. இதனுடன், ஒரு அழகான குழந்தையின் புகைப்படமும் விராட்டின் ரசிகர் மன்றங்களால் பரப்பப்பட்டது. நெட்டிசன்கள் அந்தக் குழந்தையை அனுஷ்கா மற்றும் விராட்டின் ஆண் குழந்தை அகாய் என்று கூறிவந்தனர்.
இருப்பினும், வைரலாக பகிரப்பட்ட படத்தில் இருக்கும் அந்த குழந்தை அகாய் இல்லை என்பது நிரூபணமாகியுள்ளது. நம்பத்தகுந்த ஆதாரங்களில் இருந்து கிடைத்த தகவலில், அந்த குழந்தை ஒரு நண்பரின் மகள் என்பது தெரியவந்துள்ளது.
பத்து இல்ல; இருபது இல்ல; ஒரே ஆண்டில் 50 படங்கள் - சாதனை படைத்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?