
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் வரை ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். சமீபத்தில் சண்டைக்கோழிகளாக மாறிய தனுஷும், நயன்தாராவும் இந்த திருமண விழாவில் கலந்துகொண்டதுமட்டுமின்றி அருகருகே அமர்ந்திருந்ததும் பேசுபொருள் ஆனது. அதுமட்டுமின்றி அந்த திருமண விழாவில் எடுத்த வீடியோக்களும் வைரல் ஆனது.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் இட்லி கடை என்கிற படத்தை தயாரிக்கிறார். அதுமட்டுமின்றி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் எஸ்.கே.23 படத்தின் தயாரிப்பாளரும் அவர் தான். தமிழ் சினிமாவில் வட்டாரத்தில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு நண்பர்களும் ஏராளம் உண்டு. இதனால் அவரது திருமண விழாவுக்கு நட்சத்திர படையே வந்திருந்தது.
இதையும் படியுங்கள்... சண்டைக்கு பின் தனுஷ் - நயன்தாரா இடையே நடந்த எதிர்பாரா சந்திப்பு! வீடியோ இதோ
ஆகாஷ் பாஸ்கரனின் சங்கீத் விழாவிலும் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், ஹரிஷ் கல்யாண், இயக்குனர்கள் அட்லீ குமார், விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர் சசிகாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. இதில் ஹைலைட் என்னவென்றால் நடிகர்கள் தனுஷும், சிவகார்த்திகேயனும் சேர்ந்து நடனமாடியது தான். அவர்களுடன் இயக்குனர் அட்லீயும் சேர்ந்து குத்தாட்டம் போட்ட வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விழாவில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டார். இருந்தாலும் தனுஷ் உடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவர் ஒரு ஓரமாக நின்று தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோட் ஆடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். கடைசியாக எதிர்நீச்சல் படத்தில் தனுஷ் உடன் சேர்ந்து லோக்கல் பாய்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட சிவகார்த்திகேயன் அதன்பின்னர் தற்போது ஆகாஷ் பாஸ்கரன் திருமண விழாவில் நடனமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... உதவி இயக்குநரிடம் கோடிக்கணக்கில் பணமா? யார் இந்த இட்லி கடை தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.