ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

Published : Nov 22, 2024, 09:35 PM ISTUpdated : Nov 22, 2024, 09:38 PM IST
ராஜஸ்தானில் தமிழ்நாட்டு வீரர்கள் மீது தாக்குதல்! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!

சுருக்கம்

ராஜஸ்தானில் நடைபெற்ற கபடி போட்டியில் தமிழக வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜஸ்தானில் நடைபெறும் இந்திய அளவிலான கபடி போட்டி பல்கலைக்கழங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டி தனியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பில் நடைபெற்று வருகிறது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த எஸ்.ஆர்.எம், வேல்ஸ் யுனிவர்சிட்டி உள்ளிட்ட பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். தென் இந்தியாவில் இருந்து 4 அணிகள் சென்றுள்ளன.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

போட்டியின் போது தமிழ்நாட்டு வீரர்களுக்கு சரியான பாயிண்ட்களும், போனஸ்களும் வழங்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தமிழ்நாட்டு வீரர்கள் கேள்வி எழுப்பிய போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த போட்டிகளை காண வந்த பிரபல நடிகர்கள் வந்திருந்த நிலையில் அவர்கள் முன்னிலையிலையே வீரர்களையும், பயிற்சியாளர்களையும் ராஜஸ்தான் வீரர்கள் தாக்கி உள்ளனர்.

இதையும் படிங்க:  Government School Teacher: முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! குஷியில் அரசு பள்ளி ஆசிரியர்கள்!

அதுவும் இருக்கைகளை கொண்டு தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்வது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்த நபரையும் தாக்கி தமிழகம் திரும்பிச் செல்லுங்கள்  என திட்டியதாக வாய்ஸ் ரெக்கார்டை தமிழக வீரர்கள் பகிர்ந்துள்ளனர். 

இவ்விவகாரம் நடந்த உடன் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகத்துடன் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசாரித்து, அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யப்பட்டதாகவும் தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில் மாணவர்கள் சுமூகமாக பங்கேற்றனர். நாளை தமிழகம் திரும்புகின்றனர். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!