மாணவர்களே எல்லாரும் ரெடியா? வெளியானது பிளஸ் 2 அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை!

By Ansgar R  |  First Published Nov 22, 2024, 10:35 PM IST

Higher Secondary Exams : தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வுக்கான அட்டவனாம் இப்பொது வெளியாகியுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 9ம் தேதி தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் தொடங்க உள்ளது. அதற்கான அதிகாரபூர்வ அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

மாணவ மாணவிகள் தங்களுடைய அரையாண்டு தேர்வு பரிட்சைக்கு நல்ல முறையில் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் ஒவ்வொரு தேர்வுக்கும் இடையில் நல்ல கால இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 9ம் தேதி திங்கட்கிழமை தமிழ் தேர்வு நடைபெற உள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

பள்ளி மாணவர்களுக்கு வந்தாச்சு குட்நியூஸ்! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

அதைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான ஆங்கில தேர்வு செவ்வாய்க்கிழமை டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறுகிறது. அதன் பிறகு டிசம்பர் 12ஆம் தேதி வியாழக்கிழமை, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், எத்திக்ஸ் அண்ட் இந்தியன் கல்ச்ச,ர் கம்ப்யூட்டர் சயின்ஸ், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், பயோ கெமிஸ்ட்ரி, ஹோம் சயின்ஸ், பொலிடிகல் சயின்ஸ், ஸ்டேடிஸ்டிக்ஸ், நர்சிங் வொகேஷனல், பேசிக் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் மற்றும் அட்வான்ஸ் லாங்குவேஜ் (தமிழ்) உள்ளிட்ட பரீட்சைகள் நடைபெற உள்ளது. 

அதேபோல டிசம்பர் மாதம் 14ஆம் தேதி சனிக்கிழமை பயாலஜி, பாட்டனி, ஹிஸ்டரி, பிசினஸ் மேத்தமேடிக்ஸ், பேசிக் சிவில் இன்ஜினியரிங், பேசிக் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், பேசிக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆபீஸ் மேனேஜ்மென்ட் அண்ட் செக்ரெட்ரியேட்டர்ஷிப் உள்ளிட்ட பரிட்சைகள் நடைபெற உள்ளது. 

அதேபோல டிசம்பர் 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கணிதம், ஜூவாலஜி, காமர்ஸ், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் அண்ட் டயட்டிக்ஸ், டெக்ஸ்டைல் அண்ட் டிரஸ் டிசைனிங், ஃபுட் சர்வீஸ் மேனேஜ்மென்ட், அக்ரிகல்சுரல் சயின்ஸ், நர்சிங் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. 

அதேபோல டிசம்பர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை கெமிஸ்ட்ரி, அக்கவுண்டன்சி மற்றும் ஜாக்ரபி உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில், டிசம்பர் 23ஆம் தேதி திங்கட்கிழமை பிஸிக்ஸ், எகனாமிக்ஸ் மற்றும் எம்பிளாயபிலிட்டி ஸ்கில்ஸ் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. 

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்! 2025ம் ஆண்டு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? வௌியான லிஸ்ட்!

click me!