ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி

By SG BalanFirst Published Feb 24, 2024, 8:47 AM IST
Highlights

இலங்கை செல்வதற்காக மத்திய அரசிற்கு கடிதம் அனுப்பி இருந்த நிலையில், திருச்சி மத்திய சிறை முகாமில் இருக்கும் சாந்தன் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அவர் இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது.

தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராபர்ட் பையாஸ் ஜெயக்குமார் முருகன் நளினி உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Latest Videos

விசாரணைக்கு பின்னர் அவர்ளுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள்  மரண தண்டனை எதிர்த்து மேல் முறையீடு செய்தனர். அதன் காரணமாக 1999ஆம் ஆண்டு மே 11ஆம் தேதி அவர்களுக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து விசாரணை அடுத்து நீதிமன்றம் சாந்தனு, ராபர்ட்பையாஸ், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்து உத்தரவிட்டது. அதன் பின்னர் அவர்கள் இலங்கை செல்ல முடியாது என்பதால் விடுதலை செய்யப்பட்டவர்கள் பல சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.

ஐ.பெரியசாமி விடுதலைக்கு எதிரான வழக்கு.. தீர்ப்புக்கு நாள் குறித்த நீதிமன்றம்.. அமைச்சர் பதவி தப்புமா?

அதனை தொடர்ந்து இலங்கை நாட்டிற்கு செல்வதற்கான முயற்சி ஈடுபட்டு மத்திய அரசிற்கு அதற்கான கோரிக்கைகள் அடங்கிய கடிதம் அனுப்பி இருந்தார். இந்நிலையில் திருச்சி மத்திய சிறை முகாமில் இருக்கும் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. 

சாந்தனுக்கு கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவா் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர்  உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்லீரல் செயலிழப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு இந்த அனுமதியை அளித்துள்ளது.

மேலும், இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை தூதரக அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்ற பின் சாந்தன் அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார் எனக் கூறப்படுகிறது.

மதுரையில் உதயமாகும் ஐடி பார்க்.. மக்கள் குஷியோ குஷி.. திட்டத்தை கையில் எடுத்த டாடா நிறுவனம்..

click me!