கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடை மீது ஏறி விபத்து... வெளியானது சிசிடிவி காட்சிகள்!!

By Narendran SFirst Published Apr 24, 2022, 10:07 PM IST
Highlights

மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளான நிலையில் விபத்தின் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 

மின்சார ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளான நிலையில் விபத்தின் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. சென்னை பணிமனையில் இருந்து சென்னை பீச் கடற்கரை ரயில் நிலையத்திற்கு மின்சார ரயில் ஒன்று பயணிகள் இன்றி காலியாக சென்றுக் கொண்டிருந்தது. ஒன்றாம் நடைமேடையில் வந்து கொண்டிருந்த அந்த மின்சார ரயில் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதன் காரணமாக அந்த மின்சார ரயில் ஒன்றாம் நடைமேடையின் மீது ஏறியது. இதனால் ஒன்றாம் நடைமேடையின் மேல் அமைக்கப்பட்டிருந்த கடைகள் சேதமடைந்தன.

இதேபோல் ஒன்றாம் நடைமேடையின் தரைதளமும் சேதமடைந்தது. நல்வாய்ப்பாக ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் ரயில் ஓட்டுநருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. பிரேக் பிடிக்காததால் ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையின் மீது ஏறியதாக கூறப்படுகிறது. இந்த ரயில் விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் அறிக்கையில் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், இன்று 24.04.22 மாலை 16.25 மணியளவில் பீச் ரயில் நிலைய நடைமேடை எண் 01 ல் யாரடுக்கு சென்று திரும்பிய empty rack ரயிலை, LP சங்கர் இயக்கி வந்த போது அவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே இருந்த நடை மேடையில் ஏறி கட்டிடத்தில் மோதி நின்று உள்ளது.

 

கட்டுப்பாட்டை இழந்த மின்சார ரயில் நடைமேடை மீது ஏறி விபத்து... வெளியானது சிசிடிவி காட்சிகள்!! pic.twitter.com/h17eJudQxI

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

இந்த சம்பவத்தில் வண்டியில் பயணிகள் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பு உயிர் சேதமோ ஏற்படவில்லை. மேலும் LP பிக்கும் எந்தவித அடியும் படவில்லை என்பது தெரியவருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் கட்டுபாட்டை இழந்தது தான் இந்த விபத்துக்கு கரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரயில் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மேல் ஏறி நின்றது. இதை கண்ட மக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினார். இதனிடையே இந்த மின்சார ரயில் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

click me!