சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார்.

11:06 PM (IST) Dec 30
நிவாரண நிகழ்ச்சியே முடித்துவிட்டு நடிகர் விஜய் கிளம்பும் போது அவரை காண ரசிகர்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 2 பெண்கள் உட்பட 6 பேர் காயம் அடைந்தனர்.
10:42 PM (IST) Dec 30
கோயம்பேட்டில் ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் அருகில் உள்ள வளைவு சந்திப்பு சாலைக்கு கேப்டன் விஜயகாந்த் சதுக்கம் என பெயரிடப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
10:25 PM (IST) Dec 30
ஒன்ப்ளஸ் (OnePlus) அதன் மலிவு விலை 5G ஸ்மார்ட்போனின் விலையை குறைத்துள்ளது. OnePlus Nord 3 5G பற்றி பார்க்கலாம். இது பிராண்டின் Nord தொடரில் மிகவும் சக்திவாய்ந்த தொலைபேசியாகும்.
08:46 PM (IST) Dec 30
2023 ஆம் ஆண்டில் பல்வேறு இ-ஸ்கூட்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. இவற்றில் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
07:22 PM (IST) Dec 30
நீங்கள் Gpay, Paytm மற்றும் PhonePe மூலமாகவும் UPI பணம் செலுத்தினால், உங்களுக்காக ஒரு சிறப்புச் செய்தி உள்ளது. அதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
06:50 PM (IST) Dec 30
பிரதமர் நரேந்திர மோடி தனது அயோத்தி பயணத்தின் போது, பிரதமர் ஆவாஸ் யோஜனா மற்றும் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பயனாளியான மீரா மஞ்சியின் வீட்டிற்குச் சென்றார்.
06:25 PM (IST) Dec 30
தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும்போது நடிகர் டி. ராஜேந்தர் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
05:30 PM (IST) Dec 30
இனி பெண்கள் டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்யலாம். இதுதொடர்பான ரயில்வே விதி என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
05:23 PM (IST) Dec 30
விமானத்தை வழிநடத்திய கேப்டன் அசுதோஷ் சேகர், இந்த குறிப்பிடத்தக்க பயணத்தை வழிநடத்தியதில் தனது மகத்தான பெருமையையும் பெருமையையும் வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
04:52 PM (IST) Dec 30
2024 இல் டிஜிட்டல் மாற்றங்கள் வர உள்ளது. இதன் மூலம் ஜனவரி 1 முதல் UPI ஐடிகள், சிம் கார்டுகள், வரி வருமானம் மற்றும் பலவற்றைப் பாதிக்கும் முக்கிய மாற்றங்கள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்.
01:46 PM (IST) Dec 30
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் இன்று முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். விஜயகாந்தின் லட்சியத்தை வென்று எடுப்பதுதான் என்னுடைய நோக்கம். விஜயகாந்திற்கு மணிமண்டபம் கட்ட அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விஜயகாந்த் நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
12:57 PM (IST) Dec 30
மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
12:44 PM (IST) Dec 30
12:43 PM (IST) Dec 30
நெல்லையில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புகளை அடுத்த அங்குள்ள மக்களுக்கு உதவவும் வகையில் நிவாரண பொருட்களை வழங்க இப்பொது நடிகர் தளபதி விஜய் நேரடியாக திருநெல்வேலிக்கு வந்துள்ளார். அங்கு நடைபெறும் விழாவில் அவர் மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கவுள்ளார்.
12:18 PM (IST) Dec 30
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து SETC மற்றும் தனியார் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
12:15 PM (IST) Dec 30
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பணியிலிருந்த காவல் துறை பெண் ஆய்வாளர் காந்திமதியை கன்னத்தில் அடித்து தாக்கிய திமுக முன்னாள் நகர் மன்ற தலைவர் ஸ்ரீதரை கைது செய்ய வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
11:33 AM (IST) Dec 30
11:32 AM (IST) Dec 30
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
11:28 AM (IST) Dec 30
11:01 AM (IST) Dec 30
10:22 AM (IST) Dec 30
பிரதமர் மோடி இன்று அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் துவக்கி வைக்க இருக்கும் அம்ரித் பாரத் ரயில் உள்கட்டமைப்பு!!
10:09 AM (IST) Dec 30
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் ஓட்டுநர், நடத்துனர்களுக்காக ஓய்வு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
09:50 AM (IST) Dec 30
அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
08:53 AM (IST) Dec 30
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் உயிரிழந்த நிலையில், அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லக்கடக்கம் செய்யப்பட்டது.
08:49 AM (IST) Dec 30
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் ஆய்வாளரைத் தாக்கிய திமுக நிர்வாகி மற்றும் அவரது மனைவி, கோயில் ஊழியர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
07:56 AM (IST) Dec 30
நெல்லை மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அரையாண்டு தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
07:33 AM (IST) Dec 30
புதுக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் பெண் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
07:33 AM (IST) Dec 30
ஆளுங்கட்சியை சேர்ந்த நெல்லை மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் ஜனவரி 12ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
07:32 AM (IST) Dec 30
சென்னையில் 588வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.