தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 10,975 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.

11:29 PM (IST) Oct 28
நடிகர் கார்த்தியின் 25வது படமான 'ஜப்பான்' படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 28ம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில் ஜப்பான் படத்தில் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
11:13 PM (IST) Oct 28
இந்த வங்கியில் ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறந்து, அதனுடன் இலவச டெபிட் மற்றும் கிரெடிட் கார்டைப் பெறுங்கள். இதனைப் பற்றி முழுமையான விவரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
10:38 PM (IST) Oct 28
தீபாவளிக்கு, கார் உற்பத்தியாளர்கள் பல்வேறு கார் பிரிவுகளில் தாராளமான தள்ளுபடிகளை வழங்குகின்றனர். அவற்றின் விலை மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
10:04 PM (IST) Oct 28
தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
09:35 PM (IST) Oct 28
வாரிசுகள் திறமைசாலிகளாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு வேணு சீனிவாசன் உள்ளிட்டோர் திகழ்கின்றனர். வாரிசு என்றதும், ஏதோ அரசியல் பேசுவதாக நினைக்க வேண்டாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
09:01 PM (IST) Oct 28
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பலரும், தங்கள் அபிமானவர்களுக்கு பல்வேறு பரிசுகளை வழங்குவது வழக்கம். இந்த தீபாவளிக்கு உங்கள் நண்பர்களுக்கு அளிக்கக்கூடிய பரிசுகளை இங்கு பார்க்கலாம்.
08:13 PM (IST) Oct 28
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பவுர்ணமி விழாவில் 10 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்றனர்.
07:50 PM (IST) Oct 28
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அப்டேட் வெளியிட்டுள்ளது.
06:25 PM (IST) Oct 28
ஐஆர்சிடிசி திருப்பதி செல்வதற்கான அருமையான வாய்ப்பை வெளியிட்டுள்ளது. குறைந்த விலையில் ஆந்திராவில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்கலாம். இதன் விலை மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
05:26 PM (IST) Oct 28
எவோலெட் டெர்பி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அருமையான அம்சங்களுடன் வந்துள்ளது. இதன் விலை மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
04:56 PM (IST) Oct 28
ரிசர்வ் வங்கி சிபில் ஸ்கோர் தொடர்பாக 5 புதிய விதிகளை உருவாக்கியுள்ளது. கடன் வாங்குவதற்கு முன் உடனடியாக சரிபார்ப்பது அவசியம்.
04:38 PM (IST) Oct 28
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களில் 2 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
02:06 PM (IST) Oct 28
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் முத்தரசன் கூறியுள்ளார்.
02:05 PM (IST) Oct 28
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
12:46 PM (IST) Oct 28
மத்தியில் ஆளும் அரசின் கட்சியில் தமிழத்தில் பாஸ்ட் புட் தலைவர்கள் உருவாகி வருகின்றனர் என அண்ணாமலையை மறைமுகமாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
11:07 AM (IST) Oct 28
தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 9ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 10,975 சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை திட்டமிட்டுள்ளது.
11:05 AM (IST) Oct 28
காய்கறிகளின் வரத்தை பொறுத்து தினமும் விற்பனை விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தக்காளி மற்றும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக விலை உயர்ந்துள்ளது.
09:19 AM (IST) Oct 28
ஒவ்வொரு பொருள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஒவ்வொரு விதமான பலனை தரும். அது போல அன்னத்தால் அபிஷேகம் செய்தால் பிறவா நிலை கிடைக்கும். சந்திரகிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் காணலாம்.
09:18 AM (IST) Oct 28
சந்திர கிரகணத்தை முன்னிட்டு இன்று திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை 8 மணி நேரம் அடைக்கப்பட்டு பின்னர் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
08:01 AM (IST) Oct 28
சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:42 AM (IST) Oct 28
பசும்பொன்னிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவரை அனுமதிக்கக் கூடாது என சட்ட கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
07:41 AM (IST) Oct 28
3 கொலை, 12 கொலை முயற்சி வழக்குகளில் சென்னை போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி காசிமேடு மதன் சாந்தோம் பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.