Published : Oct 27, 2023, 07:36 AM ISTUpdated : Oct 27, 2023, 10:17 PM IST

Tamil News Live Updates : ஆளுநரால் தான் திராவிட மாடல் பிரபலம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

ஆளுநரை மாற்றி விடாதீர்கள் என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுக்கிறேன். ஆளுநரால் தான் திராவிட மாடல் பிரபலம் அடைகிறது. திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார். குறைந்தபட்சம் மக்களவை தேர்தல் வரையிலாவது ஆளுநரை மாற்றி விடாதீர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

Tamil News Live Updates : ஆளுநரால் தான் திராவிட மாடல் பிரபலம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

10:17 PM (IST) Oct 27

AirPods Pro : வெறும் ரூ.1,199க்கு விற்பனைக்கு வந்த ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ.. அதிரடி விலை குறைப்பு..

ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.1,199க்கு கிடைக்கிறது. ஏர்போட்ஸ் ப்ரோவை தள்ளுபடி விலையில் வாங்குவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

09:52 PM (IST) Oct 27

சிறந்த 3 மியூச்சுவல் ஃபண்டு: கடந்த 5 ஆண்டுகளில் சூப்பரான வருமானம் தந்த ஃபண்ட்கள் இதுதான்..!

இந்தியாவின் 3 சிறந்த மல்டி கேப் மியூச்சுவல் ஃபண்டுகள், இந்தத் திட்டங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெஞ்ச்மார்க் இன்டெக்ஸ் வருமானத்தை முறியடித்தன.

09:35 PM (IST) Oct 27

நிலவில் இறங்கிய விக்ரம் லேண்டர்.. அடேங்கப்பா.!! இப்படி நடந்துச்சா..! விண்வெளி ஆய்வாளர்கள் தகவல் !!

விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் போது அதிக தூசுகளை எழுப்பி ஒளிவட்டத்தை உருவாக்கியது.

09:22 PM (IST) Oct 27

என்னா ஸ்பீட்.. ஆர்டர் மேல ஆர்டர்ஸ் குவியுது.. Xiaomi 14, Xiaomi 14 Pro அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?

Xiaomi 14 சீரிஸ் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Xiaomi 14, Xiaomi 14 Pro ஆகியவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

07:29 PM (IST) Oct 27

ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும்.. 200 கிலோ மீட்டர் தூரம் ஜாலியாக பயணிக்கலாம்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை?

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் தூரம் செல்லும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் பிற அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

07:02 PM (IST) Oct 27

அக்டோபர் 28 முதல் நவம்பர் 12 வரை.. வங்கிகளுக்கு பல நாட்கள் விடுமுறை.. எந்தெந்த தேதி தெரியுமா?

அனைத்து வங்கி வாடிக்கையாளர்களுக்கும் முக்கியமான செய்தி உள்ளது. வங்கி சம்பந்தமான வேலைகள் ஏதும் இருந்தால் சீக்கிரம் செய்து முடிக்கவும். அக்டோபர் இறுதி முதல் நவம்பர் முதல் வாரம் வரை சுமார் 9 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட உள்ளன.

06:38 PM (IST) Oct 27

சந்திர கிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம்: எந்த நேரம்.. எப்படி வழிபடுவது.. சிறப்புகள் என்ன?

ஒவ்வொரு பொருள் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்வது ஒவ்வொரு விதமான பலனை தரும். அது போல அன்னத்தால் அபிஷேகம் செய்தால் பிறவா நிலை கிடைக்கும். சந்திரகிரகணத்தில் வரும் ஐப்பசி அன்னாபிஷேகம் பற்றியும், அதன் சிறப்புகள் பற்றியும் காணலாம்.

06:22 PM (IST) Oct 27

பிரியங்கா காந்திக்கு ஸ்ரீ தேவநாராயண் கோயில் பூசாரி கண்டனம்!

பிரதமர் மோடி கோயில் நன்கொடை குறித்த பிரியங்கா காந்தியின் கருத்துக்கு அக்கோயில்  பூசாரி கண்டனம் தெரிவித்துள்ளார்

05:43 PM (IST) Oct 27

சில நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும்.. 112 கிமீ வரை பயணிக்கலாம்.. குறைந்த விலையில் தரமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

குறைந்த விலையில் நல்ல மைலேஜுடன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்துள்ளது. சில நிமிடங்களில் சார்ஜ் செய்யக் கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

05:26 PM (IST) Oct 27

கடல்சார் துறை சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் இருக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் அறிவுரை!

கடல்சார் துறை சுறுசுறுப்பாகவும், விரைவாகவும் இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவுறுத்தியுள்ளார்

05:24 PM (IST) Oct 27

குறைந்த விலையில் அந்தமான் தீவை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ஐஆர்சிடிசி அந்தமான் நிக்கோபார் டூர் பேக்கேஜ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான சுற்றுலா கட்டணம் மற்றும் பிற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

04:57 PM (IST) Oct 27

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி: பிரதமர் மோடி புகழாரம்!

டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியில், இந்தியா எந்த வளர்ந்த நாட்டிற்கும் குறைந்த நிலையில் இல்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

04:17 PM (IST) Oct 27

ஒப்புதல் வாங்காமல் அரசு ஊழியர்கள் 2ஆவது திருமணம் முடிக்க கூடாது: அசாம் அரசு அதிரடி!

அரசு ஊழியர்கள் அரசாங்கத்தின் ஒப்புதல் இல்லாமல் 2ஆவது திருமணம் செய்ய முடியாது என அசாம் மாநில அரசு தெரிவித்துள்ளது

03:43 PM (IST) Oct 27

முக்கிய அறிவிப்பு.. இனி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 கிடைக்கும்.. விண்ணப்பிப்பது எப்படி?

விவசாயிகளுக்கு அருமையான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 கிடைக்கும்.

03:22 PM (IST) Oct 27

ஒருமுறை சார்ஜ் செய்தால் 80 கிமீ செல்லலாம்.. கம்மி பட்ஜெட்டில் கிடைக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் லிஸ்ட்..

80 கிலோமீட்டருக்கு மேல் வரக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றி பார்க்கலாம். அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விரிவாக பார்க்கலாம்.

02:58 PM (IST) Oct 27

தீபாவளி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்.. அகவிலைப்படி அதிரடி உயர்வு !!

7வது ஊதியக் குழு இந்த மாநில அரசு ஊழியர்களுக்கு 4% DA உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு சம்பளம் அதிகரிக்கப்படும் என்பதைச் சரிபார்க்கவும்.

01:49 PM (IST) Oct 27

பெட்ரோல் குண்டு வீச்சு.. ஆதாரங்களை வெளியிட்ட டிஜிபி சங்கர் ஜிவால்

பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக ரவுடியை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். 

01:47 PM (IST) Oct 27

மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்திற்கான நிதியை விடுவிக்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

01:46 PM (IST) Oct 27

சத்தீஸ்கர் தேர்தல்: முதல் தலைமுறை வாக்காளர்கள் மீது கவனம் செலுத்தும் காங்கிரஸ்!

சத்தீஸ்கர் தேர்தலையொட்டி, முதல் தலைமுறை  வாக்காளர்கள் மீது காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தியுள்ளது

01:15 PM (IST) Oct 27

அமர்பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10 வரை நீதிமன்ற காவல்

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு நவம்பர் 10ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

12:03 PM (IST) Oct 27

ஆளுநரால் தான் திராவிட மாடல் பிரபலம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஆளுநரை மாற்றி விடாதீர்கள் என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுக்கிறேன். ஆளுநரால் தான் திராவிட மாடல் பிரபலம் அடைகிறது. திமுகவுக்கு ஆளுநர் இலவசமாக பரப்புரை செய்கிறார். குறைந்தபட்சம் மக்களவை தேர்தல் வரையிலாவது ஆளுநரை மாற்றி விடாதீர்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

12:00 PM (IST) Oct 27

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் செயல்படும்

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடக்க நடுநிலை, உயர்மேல்நிலைப் பள்ளிகள் நாளை முழுவேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

11:58 AM (IST) Oct 27

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்க கோரி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 

11:52 AM (IST) Oct 27

திமுக கூட்டணி கட்சிகள் மீது பழி போடுவது தான் நோக்கம்! ஆளுநர் மாளிகை பாஜகவின் அரசியல் கூடாரமாக மாறிபோச்சு! வைகோ

அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சக்திகள் சூத்திரதாரியாக இருந்து ஆளுநரைப் பயன்படுத்துகின்றனர் என்பதை தமிழக மக்கள் நன்றாகவே அறிவார்கள் என வைகோ கூறியுள்ளார்.

11:52 AM (IST) Oct 27

இப்படிப்பட்ட ரவுடிக்கு ஈஸியா ஜாமீன் கிடைக்குதுன்னா! சட்டம் ஒழுங்கு எப்படி இருக்குனு பாத்துக்கங்க! இந்து முன்னணி

ஒரு ரவுடியின் அராஜக செயலுக்கு காரணம் வெளியிடும் அளவிற்கு காவல்துறை துரிதமாக செயல்படுவது வேடிக்கையானது என காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

10:51 AM (IST) Oct 27

பெட்ரோல் குண்டு தாக்குதலை சிபிஐ விசாரிக்க வேண்டும்.. எல்.முருகன்

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தை  என்ஐஏ அல்லது சிபிஐ விசாரிக்க வேண்டும். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதற்கு பெட்ரோல் குண்டு சம்பமே உதாரணம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். 

10:39 AM (IST) Oct 27

எஃப்டி விதிகளில் மாற்றம்: ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு!

ஃபிக்ஸட் டெபாசிட் எனப்படும் FD விதிகளில் சில மாற்றங்களை இந்திய ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ளது

09:34 AM (IST) Oct 27

அண்ணாமலை ரைட் அண்ட் டை விடாமல் சுத்துபோடும் போலீஸ்.. அமர்பிரசாத் ரெட்டி மீது குண்டர் சட்டம் பாய்கிறதா?

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் தீவிர ஆதரவாளரும், அக்கட்சியின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

09:23 AM (IST) Oct 27

குட்நியூஸ்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

புகழ் பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

08:11 AM (IST) Oct 27

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசிய கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது பாஜக வழக்கறிஞரா.? உண்மை என்ன.?

ஆளுநர் மாளிகை மீது குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத்தை, ஏற்கனவே பல வழக்குகளில் சிறையில் அடைக்கப்படவரை ஜாமினில் வெளியே  எடுத்தது பாஜக நிர்வாகி என தகவல் வெளியாகியுள்ளது. 

07:38 AM (IST) Oct 27

Power Shutdown: சென்னையில் இன்று இந்த முக்கியமான இடத்தில் மின் தடையா.? எந்த பகுதி தெரியுமா.? வெளியான அறிவிப்பு

பராமரிப்பு பணிக்காக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முன்கூட்டியே அறிவித்து மின் தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும். அந்த வகையில் இன்று காலை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள போயஸ் தோட்டத்தில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

07:38 AM (IST) Oct 27

ஆளுநர் மாளிகை சொல்வது எல்லாம் பொய்...! பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் நடந்தது என்ன.? டிஜிபி புதிய விளக்கம்

 ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது எனவும், குண்டு வெடித்தாகவும், குற்றவாளி அத்துமீறி ஆளுநர் மாளிகையினுள் நுழைய முற்பட்டு ஆளுநர் மாளிகை வாயிற்காப்பாளர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள் என சொல்வது அனைத்தும் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என டிஜிபி தெரிவித்துள்ளார். 
 

07:37 AM (IST) Oct 27

அமைச்சரை அதிகாலையில் அதிரடியாக கைது செய்த அமலாக்கத்துறை... அதிர்ச்சியில் இண்டியா கூட்டணி

உணவுத்துறையில் முறைகேடு தொடர்பாக நேற்று மேற்கு வங்க மாநில அமைச்சர் ஜோதிப்ரியா வீட்டில் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில் இன்று அதிகாலை கைது செய்துள்ளது.


More Trending News