Published : Oct 24, 2023, 07:19 AM ISTUpdated : Oct 24, 2023, 08:28 PM IST

Tamil News Live Updates: கோவை - சென்னை அதிவிரைவு ரயில் புறப்பாடு 2 மணி நேரம் தாமதம்

சுருக்கம்

கோவையில் இருந்து சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் இன்று ஒருநாள் மட்டும் மாலை 3.15 மணிக்கு பதிலாக 5.15 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 Tamil News Live Updates: கோவை - சென்னை அதிவிரைவு ரயில் புறப்பாடு 2 மணி நேரம் தாமதம்

08:28 PM (IST) Oct 24

ஜம்மு காஷ்மீரில் முடிவுக்கு வரும் பயங்கரவாதம்: டிஜிபி தகவல்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டதாக டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார்

07:07 PM (IST) Oct 24

திருப்பதி வேடுபறி உற்சவம்: மான் வேட்டையாடினார் மலையப்பசாமி!

திருப்பதி மலையில் வேடுபறி உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது

04:53 PM (IST) Oct 24

தீவிர புயலாக வலுவடைந்த ஹமூன்: ஒடிசாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை

தீவிர புயலாக வலுவடைந்துள்ள ஹமூன் புயல், இன்று மாலை கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

03:55 PM (IST) Oct 24

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள்: ஆளுநரை சாடிய முதல்வர் ஸ்டாலின்!

திடீர் குபீர் நாட்டுப்பற்றாளர்கள் என ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்

03:54 PM (IST) Oct 24

இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை!

இந்தியா உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இலவச சுற்றுலா விசா வழங்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

03:07 PM (IST) Oct 24

Lokesh Kanagaraj: 'லியோ' கொண்டாட்டத்தில் நடந்த விபரீதம்! லோகேஷ் கனகராஜ் மருத்துவ மனையில் அனுமதி..?

'லியோ' பட இயக்குனர்,  லோகேஷ் கனகராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகி உள்ள தகவல், திரையுலகினர் மற்றும் தளபதி ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 

12:55 PM (IST) Oct 24

தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

தமிழ்நாடு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்து இருந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெற்றப்பட்டது. 

12:25 PM (IST) Oct 24

உதயநிதி, ஜெயம் ரவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட யோகி பாபு மகள் பிறந்தநாள்! வைரல் போட்டோஸ்!

பிரபல காமெடி நடிகர் யோகி பாபுவின் மகள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இதுகுறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் படிக்க 
 

11:33 AM (IST) Oct 24

Today Gold Rate in Chennai : பொதுமக்களை அலறவிடும் தங்கம் விலை.. இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

11:09 AM (IST) Oct 24

Leo Day 5 Collection: போட்ரா வெடியா... வசூல் மழை பொழியும் 'லியோ'..! இந்தியாவில் மட்டும் இத்தனை கோடி கலெக்ஷனா?

தளபதி விஜய்யின் 'லியோ' திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை குறிவைத்து, திரையரங்கில் வெளியான நிலையில், வெளியான நாளில் இருந்து வசூலில் மிரட்டி வருகிறது. மேலும் இப்படத்தின் இந்திய வசூல் நிலவரம் குறித்த புதிய தகவல் வெளியாகி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 

09:13 AM (IST) Oct 24

இன்று வழக்கம் போல ஆம்னி பேருந்துகள் இயங்கும்

தமிழ்நாட்டில் இன்டறு வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

08:04 AM (IST) Oct 24

ஆவடியில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து! பெரும் உயிர் சேதம் தவிர்ப்பு! ரயில் சேவை பாதிப்பு!

ஆவடி ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்து காரணமாக சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

07:23 AM (IST) Oct 24

எந்தவொரு வேலையும் பார்க்காமல்.. கிடைக்கும் மேடைகளில் அரசியல் பேசும் தமிழக ஆளுநர்.. செல்வப்பெருந்தகை விளாசல்!

சமஸ்கிருதத்தின் முகமுடியை கிழித்து, தமிழ்மொழியின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியவர்களை இழித்து பேசுவது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களில் மூழ்கியவர்களால் மட்டும்தான் முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவியை செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். 

07:22 AM (IST) Oct 24

இன்று முதல் ஆம்னி பேருந்துகள் ஓடாது.. என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


More Trending News