ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க புர்னேஷ் மோடிக்கும், குஜராத் அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ராகுல் காந்தி வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

05:48 PM (IST) Jul 21
தனியார் மருத்துவமனைகளில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை 2.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரவிக்குமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசு பதிலளித்துள்ளது
02:40 PM (IST) Jul 21
விளம்பரத்திற்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய அரசு அளித்துள்ளது
01:46 PM (IST) Jul 21
செந்தில் பாலாஜி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை வருகிற 26ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது
12:56 PM (IST) Jul 21
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ராஜினாமா செய்ய மட்டார் என அம்மாநில அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன
12:14 PM (IST) Jul 21
ராகுல் காந்தி வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது
10:40 AM (IST) Jul 21
மணிப்பூர் வீடியோ தொடர்பான கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவரின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது
10:07 AM (IST) Jul 21
முன்னோர்களை சரிவர வழிபடாதவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படுகிறது. பித்ரு தோஷத்தினால் வாழ்க்கையில் பலவகையான சிக்கல்கள் சந்திக்க நேரிடலாம் என கூறப்படுகிறது.
09:08 AM (IST) Jul 21
திண்டுக்கல்லில் திமுக மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர் பட்டறை சரவணன் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
07:36 AM (IST) Jul 21
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கே.கே.நகர். அம்பத்தூர், ஆவடி, அடையாறு, போரூர், வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:35 AM (IST) Jul 21
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தயாரிக்கிற அளவுக்கு தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறது. அப்படி இருக்கிற போது நம்முடைய பணத்தை கொண்டு போய் ரஷ்யாவில் முதலீடு செய்கிறார் பிரதமர் மோடி என கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.