மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அவரது வருகையின் போது, மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பாஜகவினர் போராட்டம் செய்து வருகின்றனர்.

12:28 AM (IST) Jun 11
தேயிலைத் தோட்ட நிலங்களை, வனத்துறைக்குக் கொடுக்க திமுக அரசு முடிவெடுத்ததை எதிர்த்து, தேயிலை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக பாஜக மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டது. இந்தப் போராட்டத்தின் விளைவாக, தமிழக அரசு தன் முடிவை மாற்றிக் கொண்டது என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.
12:07 AM (IST) Jun 11
எங்கே என்ன பேச வேண்டும் என எனக்கு தெரியும், அதை அங்கே பேசிக்கிறேன் என்று அரசியல் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு நடிகர் சித்தார்த் பதில் அளித்துள்ளார்.
11:51 PM (IST) Jun 10
தமிழகத்தை சேர்ந்த தொழில், கலை, இலக்கியம் மற்றும் சமூக சேவையில் சாதித்த 24 பிரபலங்களுடன் இரவு உணவு அருந்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
11:29 PM (IST) Jun 10
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே 30 ஆம் தேதி முதல் ஜூன் 30 வரை நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை பாஜக நடத்தி வருகிறது.
10:36 PM (IST) Jun 10
மகாராஷ்டிராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
10:05 PM (IST) Jun 10
ஆலங்குடி மகாஜனம் கிராமத்துக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஊர் மக்கள் நன்றி தெரிவித்தனர்.
09:32 PM (IST) Jun 10
தமிழ்நாட்டிற்கு பாஜக என்ன செய்தது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
09:05 PM (IST) Jun 10
பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூர் குடிமக்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
08:41 PM (IST) Jun 10
பிபர்ஜோய் தீவிர புயல், இன்று மேலும் தீவிரமடைந்து இரண்டு நாட்களில் கிட்டத்தட்ட வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
07:43 PM (IST) Jun 10
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியானது.
07:11 PM (IST) Jun 10
வேலூரில் நடைபெறவுள்ள மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை ஓட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது.
06:25 PM (IST) Jun 10
இந்த கோடையில் உங்களை குளிர்ச்சியாக வைத்திருக்க மின்விசிறி, யூ.எஸ்.பியால் இயங்கும் குளிர்சாதனப்பெட்டி மற்றும் பிற கேஜெட்களை பற்றி பார்க்கலாம்.
05:43 PM (IST) Jun 10
பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
05:14 PM (IST) Jun 10
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் 12 ரயில்கள் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சில ரயில்கள் மாற்றுப்பாதையில் செல்கிறது.
05:02 PM (IST) Jun 10
ஒடிசா ரயில் நிலையத்தில் அழுகிய முட்டைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது என்று கண்டறியப்பட்டது.
03:37 PM (IST) Jun 10
தேவாஸ் மல்டிமீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன் விஸ்வநாதன் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
12:18 PM (IST) Jun 10
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் பிரம்மோஸ்ச்சவத்தின் 9-ஆம் நாளில் பிரசாதம் வழங்குவதில் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டு இருபிரிவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில்
12:17 PM (IST) Jun 10
ரயில் நிலையத்தில் போட்டோஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதுமணத் தம்பதிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
12:16 PM (IST) Jun 10
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11:26 AM (IST) Jun 10
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும். பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் கூறியுள்ளார்.
10:02 AM (IST) Jun 10
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:03 AM (IST) Jun 10
திமுகவின் திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் லஞ்சம் வளர்ச்சியடைந்துள்ளது. தமிழகத்தில் குப்பைக்கு கூட வரி போடுகிறது திமுக அரசு. அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மிக்சி, மின்விசிறி கொடுத்த அதிமுக அரசு.
09:02 AM (IST) Jun 10
நடிகை ரோஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
08:13 AM (IST) Jun 10
எடப்பாடி நகராட்சியின் 8வது வார்டு அதிமுக கவுன்சிலர் செல்வி சக்திவேல், அக்கட்சியிலிருந்து விலகி சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
07:30 AM (IST) Jun 10
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்துள்ளார்.