Published : Oct 06, 2023, 07:13 AM ISTUpdated : Oct 06, 2023, 10:38 PM IST

Tamil News Live Updates: 5 மாநில தேர்தல்.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

சுருக்கம்

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. தேர்தல் நடத்துவது, முன்னேற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. 

Tamil News Live Updates: 5 மாநில தேர்தல்.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

10:38 PM (IST) Oct 06

இனி வங்கி லாக்கரில் இந்த பொருள்களை மட்டுமே வைக்க முடியும்.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..

புதிய வங்கி லாக்கர் விதிகளின்படி, இப்போது இந்த விஷயங்களை மட்டுமே வங்கி லாக்கரில் வைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10:01 PM (IST) Oct 06

ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கிமீ வரை பயணிக்கலாம்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?

எலக்ட்ரிக் ஒன் நிறுவனம் மேலும் இரண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.

08:54 PM (IST) Oct 06

நாடாளுமன்ற தொகுதியை குறைக்க பார்க்கிறார்கள்.. பாஜக பிளானை அம்பலப்படுத்திய மு.க ஸ்டாலின்..

தமிழகத்தில் நாடாளுமன்ற தொகுதியை குறைக்க பார்க்கிறார்கள் என்றும், இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

07:21 PM (IST) Oct 06

Saint-Gobain : தமிழ்நாட்டில் ரூ.3,400 கோடி முதலீடு செய்யும் செயின்ட் கோபைன் !!

செயின்ட் கோபைன் (Saint-Gobain India) தமிழ்நாட்டில் ரூ.3,400 கோடி முதலீடு செய்கிறது. இதில் மாநிலத்தின் பல உற்பத்தித் துறைகளில் தொடர்ச்சியான பசுமை மற்றும் பிரவுன்ஃபீல்ட் முதலீடுகளும் அடங்கும்.

07:05 PM (IST) Oct 06

வங்கி வாடிக்கையாளர்களுக்கு குட் நியூஸ்.. டெபாசிட் செய்யப்பட்ட கோரப்படாத பணத்தை திரும்ப பெறலாம்..

வங்கி வாடிக்கையாளர்கள் 30 வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட கோரப்படாத பணத்தை திரும்பப் பெறுவார்கள் என ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

06:45 PM (IST) Oct 06

ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை.. கம்மி விலையில் சுற்றிப் பார்க்கலாம் - ஐஆர்சிடிசி டூர் கட்டணம் எவ்வளவு?

தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான இடங்களுக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.

05:06 PM (IST) Oct 06

வெறும் ரூ.790க்கு கிடைக்கும் ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ.. எப்படி வாங்குவது? முழு விபரம் இதோ !!

ஆப்பிள் ஏர்போட்ஸ் ப்ரோ ரூ. 21,200 தள்ளுபடிக்கு பிறகு ரூ.790க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடியை பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

04:43 PM (IST) Oct 06

முன்பணம் செலுத்த தேவையில்லை..எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க கடன் - அருமையான ஆஃபர்..

மின்சார ஸ்கூட்டர் வாங்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? இந்த சலுகை உங்களுக்கானது தான். இதுகுறித்த முழுமையான விவரங்களை காணலாம்.

04:17 PM (IST) Oct 06

இந்தியாவில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட தூதரக அதிகாரிகள்.. கனடா அரசு முடிவுக்கு யார் காரணம்.? பின்னணி என்ன?

கனடா பல தூதரக அதிகாரிகளை இந்தியாவில் இருந்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு நகர்த்துகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

04:00 PM (IST) Oct 06

திமுக ஆட்சியில் கோவில் சொத்து.. ஆதீனம் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு - அண்ணாமலை போட்ட சபதம் !!

கோவில் சொத்துக்களையும், ஆதீன சொத்துக்களையும் அத்துமீறி ஆக்கிரமிக்கும் அராஜகத்தை நிறுத்திக்கொண்டு, உடனடியாக, தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான மருத்துவமனையை புனரமைத்து வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

03:23 PM (IST) Oct 06

வனிதா மகள்கிட்டையே சவுண்டு விட்டா சும்மா விடுவாங்களா... விசித்ராவுக்கு செம்ம டோஸ் கொடுத்த ஜோவிகா - வீடியோ இதோ

பிக்பாஸ் வீட்டில் விசித்ராவிடம் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா விஜயகுமார் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட புரோமோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

03:02 PM (IST) Oct 06

கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை காலால் உதைத்த விவகாரம்; பகிரங்கமாக மன்னிப்பு கோரிய ஊராட்சி செயலாளர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமசபைக் கூட்டத்தில் விவசாயியை காலால் எட்டி உதைத்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய ஊராட்சி செயலாளருக்கு மதுரை கிளை நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவு.

02:22 PM (IST) Oct 06

மகிழ்ச்சி செய்தி..! தங்க நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான தங்கக் கடன் உச்சவரம்பை ரூ.4 லட்சமாக ரிசர்வ் வங்கி இரட்டிப்பாக்குகிறது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

12:39 PM (IST) Oct 06

நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து பிரபல ரவுடி படப்பை குணாவிற்கு பாஜகவில் முக்கிய பதவி..!

நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை குணா பாஜகவில் இணைந்த கையோடு அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 

12:38 PM (IST) Oct 06

நிக்காத விக்கல், வாந்தி.. டெங்கு பரிசோதனை ரிசல்டும் வந்தது.. முத்தரசன் உடல்நிலை குறித்து வெளியான புதிய தகவல்.!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. 

11:38 AM (IST) Oct 06

ரொம்ப உடைஞ்சு போயிட்டேன்... முன்னாள் காதலன் கவினின் திருமணம் பற்றி மனம்திறந்த லாஸ்லியா

நடிகை லாஸ்லியா தனது முன்னாள் காதலனான கவின் திருமணம் செய்துகொண்டது பற்றி முதன்முறையாக மனம்திறந்து பேசி உள்ளார்.

11:11 AM (IST) Oct 06

5 மாநில தேர்தல்.. தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது. தேர்தல் நடத்துவது, முன்னேற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளது. 

09:59 AM (IST) Oct 06

லியோ டிரைலரால் சர்ச்சையில் சிக்கிய விஜய்!

லியோ பட டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்று வந்தாலும், அதில் நடிகர் விஜய் பேசியுள்ள கெட்ட வார்த்தைக்கு சோசியல் மீடியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

09:30 AM (IST) Oct 06

சென்னை ரயில் நிலையத்தில் மாணவனை ஓட ஓட அரிவாளால் வெட்டிய கல்லூரி மாணவர்கள்! அலறிய பயணிகள்.! நடந்தது என்ன?

சென்னை கடற்கரையில் ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் சேர்ந்து முதலாமாண்டு மாணவனை ஓட ஓட அரிவாளால் வெட்டி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

09:29 AM (IST) Oct 06

ஞாபகமா குடையை எடுத்துட்டு போங்க! இந்த 5 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் பிச்சு உதறப்போகுதாம் மழை.!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

08:51 AM (IST) Oct 06

டேய் பூமர்ஸ்... சினிமா பைத்தியம் முத்திப்போச்சா! தியேட்டரை நொறுக்கிய விஜய் ரசிகர்களை விளாசிய ப்ளூ சட்டை மாறன்

லியோ டிரைலர் திரையிட்ட தியேட்டர்களில் விஜய் ரசிகர்கள் செய்த செயல்களை லிஸ்ட் போட்டு விளாசி உள்ளார் யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்.

07:37 AM (IST) Oct 06

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று 5 மணிநேரம் மின்தடை! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்திரா நகர், திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

07:36 AM (IST) Oct 06

சென்னையில் 503வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 503வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


More Trending News