ராமேஸ்வரம், கன்னியாகுமரி, மதுரை.. கம்மி விலையில் சுற்றிப் பார்க்கலாம் - ஐஆர்சிடிசி டூர் கட்டணம் எவ்வளவு?
தென்னிந்தியாவில் உள்ள பிரபலமான இடங்களுக்குச் செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஐஆர்சிடிசி உங்களுக்காக ஒரு அற்புதமான டூர் பேக்கேஜை கொண்டு வந்துள்ளது.
IRCTC Tour Package
இந்த டூர் பேக்கேஜின் கீழ், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்குச் செல்ல உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. மதுரை நகரம் தமிழ்நாட்டின் பழமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
Rameshwaram
இதுமட்டுமின்றி, பழந்தமிழ்ச் சங்கப் பரம்பரைக்கும் மதுரைக்கும் பெரிய தொடர்பு உண்டு. ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜில் மதுரையுடன், கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கும் செல்ல வாய்ப்பு உள்ளது.
Rameshwaram Tour
இந்த டூர் பேக்கேஜின் கீழ் நீங்கள் மொத்தம் 4 இரவுகள் மற்றும் 5 நாட்கள் பயணம் செய்யலாம். இந்த டூர் பேக்கேஜ் அக்டோபர் 12, 2023 அன்று செங்கல்பட்டு சந்திப்பு, சென்னை, மதுரை மற்றும் தாம்பரத்திலிருந்து தொடங்குகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/
Rameshwaram Tour Package
ஐஆர்சிடிசியின் இந்த டூர் பேக்கேஜின் பெயர் கன்னியாகுமரி - ராமேஸ்வரம் - மதுரை (SMR023). ரயிலில் ஸ்லீப்பர் வகுப்பிலும் மூன்றாம் ஏசியிலும் பயணிக்கலாம். இந்த டூர் பேக்கேஜின் கீழ், உணவு முதல் தங்குமிடம் வரை உங்களின் முழு ஏற்பாட்டையும் ஐஆர்சிடிசி செய்யும்.
Kanyakumari
தனியாக பயணம் செய்வதற்கான கட்டணம் ரூ.23,770. இரண்டு பேருடன் பயணம் செய்தால் ஒரு நபருக்கு ரூ.12,510 கட்டணம், மூன்று பேருடன் பயணம் செய்தல் ஒரு நபருக்கு ரூ.9,400 கட்டணம் ஆகும். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசியின் இணையதளத்தை அணுக வேண்டும்.