காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது திமுக.வுக்கு புதிதல்ல; அண்ணாமலை கண்டனம்

By Velmurugan sFirst Published Jul 31, 2024, 10:20 PM IST
Highlights

மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற கர்நாடகா துணைமுதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கண்டனம்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாது அணை தொடர்பாக, தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் வலியுறுத்தியும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் துணை முதலமைச்சர் திரு. சிவக்குமார், தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தாங்கள் தயாராக இல்லை என்று தெரிவித்திருக்கிறார். 

Wayanad landslides: வயநாடு நிலச்சரிவு; பொதுமக்களிடம் உதவி கோரும் கேரளா அரசு 

Latest Videos

சந்தர்ப்பவாத இந்தி கூட்டணியின் நலனுக்காக, திமுக அரசு, தமிழக விவசாயிகளின் நலன்களைத் தாரைவார்த்ததன் விளைவு, இன்று, மேகதாது அணை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தக் கூட தமிழக அரசை மதிக்காமல் செயல்படுகிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி. 

கர்நாடக காங்கிரஸ் அரசு அவமானப்படுத்தியிருப்பது திமுக என்ற கட்சியை அல்ல. காங்கிரஸ் கட்சியால் அவமானப்படுத்தப்படுவது திமுகவிற்குப் புதிதும் அல்ல. ஆனால், ஒட்டு மொத்த தமிழக மக்களையும், விவசாயிகளையும் மதிக்காமல் நடந்து கொண்டிருக்கிறது கர்நாடக காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சியின் இந்த எதேச்சதிகாரப் போக்கினை தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன். 

Redfix: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன்; ரெட்பிக்ஸ் சேனலை இழுத்து மூட உத்தரவு

திமுக, உடனடியாக, தங்கள் கூட்டணியான காங்கிரஸ் கட்சித் தலைமையிடம், மேகதாது அணை கட்டும் கர்நாடக காங்கிரஸ் அரசின் நடவடிக்கைகளை நிறுத்த வலியுறுத்துவதோடு, தமிழகத்தின் உரிமைகளையும், தமிழக விவசாயிகளின் நலனையும் தங்கள் சந்தர்ப்பவாத இந்தி கூட்டணிக்காக வழக்கம்போல காவு கொடுக்காமல் நடந்து கொள்ளும்படியும் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

click me!