பல பகுதிகளில் இன்னமும் பூட்டியே கிடக்கும் ஏ.டி.எம்; பணம் எடுக்க முடியாமல் மக்கள் கடும் அவதி...

First Published May 16, 2018, 7:33 AM IST
Highlights
ATM still has a lot of lock in the area. Centers People are suffering from severe ...


திருவாரூர்
 
திருவாஊரில் பல பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் பூட்டிக்கிடப்பதால் மக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம். மையங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து செயல்படாமல் பூட்டியே கிடக்கின்றன. இதனால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் பெரும் அவதி அடைகின்றனர். 

ஏ.டி.எம். மையங்கள் பூட்டியே கிடப்பதால் குடும்ப செலவுகள் மற்றும் அவசர தேவைகளுக்கு கூட பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். 

தொடக்கத்தில் ஏ.டி.எம் மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை மத்திய அரசு விரைவில் சரி செய்துவிடும் என்று அறிவித்திருந்தது. அதற்குள் கர்நாடக தேர்தல் வந்ததால், தேர்தலுக்கு பிறகாவது ஏ.டி.எம் மையங்கள் திறக்கப்படும். பணத்தட்டப்பாடு தீரும் என்று மக்கள் காத்திருந்தனர்.

ஆனால், தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கையும் முடிந்த பிறகு கூட பணத் தட்டுப்பாடும் தீரவில்லை. ஏ.டி.எம் மையங்களும் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகள் பூட்டப்பட்டுள்ள ஏ.டி.எம். மையங்களை திறக்க நடவடிக்கை எடுத்து வழக்கம்போல ஏ.டி.எம் சேவையை வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

click me!