எடப்பாடி பழனிசாமி என்ற தற்குறிக்கு என்னை பற்றி பேச எந்த அதிகாரமும் இல்லை.! இறங்கி அடிக்கும் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Aug 26, 2024, 6:14 AM IST

ரஜினி திமுக அரியணை உதயநிதிக்கு போகும்போது கலவரம் வெடிக்கும் என ஸ்டாலினிடம் மறைமுகமாக கூறியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த பாஜக தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், எடப்பாடி பழனிசாமி தன்னை விமர்சிக்க தகுதியற்றவர் என்றும் அண்ணாமலை காட்டமாக பேசினார்.


ஸ்டாலினுக்கு அலர்ட் கொடுத்த ரஜினி

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று பாரதிய ஜனதா கட்சி சார்பாக  பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக  மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கருணாநிதியின் அரசியல், தனிமனித வாழ்க்கையை பிரித்துப் பார்க்கும் பக்குவம் பாஜகவுக்கு உள்ளது. 100 ஆண்டுகளை கடந்த, 5 முறை முதல்வராக இருந்த ஒரு மனிதருக்கு மத்திய அரசு சார்பாக  நாம் மரியாதை செலுத்தியுள்ளதாக தெரிவித்தார். இந்தநிலையில் தான் ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினி அலர்ட் கொடுத்துள்ளார்.  திமுக அரியணை உதயநிதிக்கு போகும்போது கலவரம் வெடிக்கும் என்பதை நடிகர் ரஜினி, சுட்டிகாட்டியுள்ளார். ரஜினி அவரது பாணியில் முதல்வரிடம் மறைமுகமாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். 

Tap to resize

Latest Videos

அப்போ நாங்க நல்ல கட்சி.. இப்போ கெட்டவங்களாக மாறிட்டோமா.? அண்ணாமலைக்கு எதிராக சீறிய இபிஎஸ்

2026ஆம் ஆண்டு தேர்தல் பாஜகவிற்கு வாய்ப்பு

தமிழகத்தில் பாஜகவை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்றால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை விட வேறு வாய்ப்பே இல்லை எனவே திராவிட அரசியலை அடியோடு ஒழிக்க, 2026 தேர்தல்தான் சரியான தருணம் என கூறினார். திமுகவுடன் பாஜக எப்போதும் கூட்டணி வைக்காது. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஒரு மாற்றுசக்தியாக பா.ஜ.க  நிரூபித்துள்ளது. நமக்கு திமுக, அதிமுக இருவருமே எதிரிகள் தான். இரண்டு திராவிட கட்சிகளை அகற்றவே என்னை மாநில தலைவராக மத்திய தலைமை நியமித்து உள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்தார். 

இபிஎஸ்க்கு தகுதி இல்லை

பிட்டிங் ஏஜென்ட் பார்ட்டியாக, டெண்டர் முறை விடும் கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி மாறியுள்ளதாக விமர்சித்த அண்ணாமலை, விவசாயின் மகனான எனது  நேர்மை, நாணயத்தை பற்றி எடப்பாடி பழனிச்சாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். எவரோ ஒருவரின் காலில் தவழ்ந்து பதவியைப் பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேச தகுதி இல்லையென காட்டமாக விமர்சித்தார். அதிமுக ஆட்சி காலத்தின் போது மாதம் மாதம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பணத்தை கொடுத்து நாற்காலியை காப்பாற்றிய எடப்பாடி பழனி சாமி என்னைப்பற்றி பேசக்கூடாது என அண்ணாமலை கூறினார். 

"பல்லு போன நடிகர்களால் இளைஞர்களுக்கு வாய்ப்பு குறையுது" - பதில் தாக்குதல் நடத்திய துரைமுருகன்!

click me!