கோவை மாவட்டத்தில் பாலம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் - தொண்டாமுத்தூர் நெடுஞ்சாலையில் தீத்திப்பாளையம் அருகே உள்ள சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் குறுக்கே பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. ஆனால் பள்ளம் குறித்து முறையான எச்சரிக்கைப் பலகையோ, வேகத் தடையோ அமைக்கப்படாததால் அப்பகுதியை கடந்து செல்பவர்கள் பள்ளத்தை அறிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்துள்ளது.
சினிமா காட்சிகளை மிஞ்சிய விபத்து சம்பவம்; அடுத்தடுத்து 12 வாகனங்கள் மோதியதில் 5 பேர் பலி
இந்நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த தேவராயபுரத்தைச் சேர்ந்த 36 வயது கார்த்திகேயன் என்பவர் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற போது, பேரூர் அடுத்த தீத்திப்பாளையம் அருகே சென்ற போது சாலையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக வாகன ஓட்டிகள் அளித்த் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பள்ளம் தோண்டப்பட்டது குறித்து முறையான எச்சரிக்கை செய்யப்பாடததால் தான் இந்த விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; காதலுடன் சிறுமி விபரீத முடிவு
இதனிடையே விபத்து ஏற்பட்ட பகுதியில் பணியாளர்கள் பள்ளத்தின் முன்பாக மண் குவியலை ஏற்படுத்தி அறிப்பு பலகையை அமைத்துள்ளனர். இந்த பணியை முன்கூட்டியே செய்திருந்தால் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று வாகன ஓட்டிகள் கவலையுடன் தெரிவித்தனர்.