மீண்டும் ஆவின் தயிர்,நெய் விலை அதிகரிப்பு! ரூ.45 வரை விலை உயர்வை மக்களால் தாங்கிக் கொள்ள முடியாது-அன்புமணி

By Ajmal Khan  |  First Published Jul 21, 2022, 1:01 PM IST

குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி போன்ற பால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு பெறப்பட்டுள்ள நிலையில், அதே போல் ஆவினுக்கும் பெற வேண்டுமே தவிர விலையை உயர்த்தக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஆவின் தயிர் விலை உயர்வு

மத்திய அரசு 5% ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதன் காரணமாக  தயிர் மற்றும் நெய் விலையை ஆவின் நிர்வாகம் உயர்த்தி உள்ளது. 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ஆக உயர்ந்துள்ளது. இதே போல 200 கிராம் தயிர் விலை 25 லிருந்து 28 ரூபாயாகவும்,  ஒரு லிட்டர் நெய்க்கு ரூ 50ம், ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும்  பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களில் தயிர் போன்ற பொருட்களுக்கு வரி விலக்கு பெற்ற நிலையில் தமிழகத்தில் விலை உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர். இது,தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

Tap to resize

Latest Videos

அதிமுக அலுவலகத்தில் வைக்கப்பட்ட சீல் அகற்றம்..! சேதமடைந்த பொருட்களை பார்த்து அதிர்ச்சியான சி.வி.சண்முகம்

திமுகவிற்கு செக் வைக்கும் அண்ணாமலை...! ஊழல் பட்டியலோடு தமிழக ஆளுநரோடு திடீர் சந்திப்பு

பொதுமக்கள் பாதிப்பு

தமிழ்நாட்டில் ஆவின் தயிர், நெய் ஆகியவற்றின் விலைகள் குறைந்தபட்சம் ரூ.5 முதல் ரூ.45 வரை விலை உயர்த்தப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களை பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது; ஏற்றுக் கொள்ள முடியாதது! கடந்த மார்ச் மாதத்தில் தான் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டன. அதன்பின் 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் ஒரு விலை உயர்வை தமிழ்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது!தயிருக்கு 5% ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டது தான் விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.  5% மட்டும் வரி விதிக்கப்பட்ட நிலையில், 20% விலையை உயர்த்துவதும்,  நெய் மீதான வரி உயர்த்தப்படாத நிலையில்  அதன் விலையையும் அரசு உயர்த்துவதும் எந்த வகையில் நியாயம்? குஜராத்தின் அமுல், கர்நாடகத்தின் நந்தினி போன்ற பால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி விலக்கு பெறப்பட்டுள்ள நிலையில், அதே போல் ஆவினுக்கும் பெற வேண்டுமே தவிர விலையை உயர்த்தக்கூடாது. எனவே விலை உயர்வை ஆவின் நிறுவனம் திரும்பப் பெற வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

aavin ghee price:gst: ஜிஎஸ்டி வரிக்கு நன்றி: ஆவின் நெய் ரூ.45 அதிகரிப்பு: சூடான தயிர்,மோர் :பட்டியல் இதோ!

 

click me!