மீண்டும் செக் வைக்கும் 6 ஆம் தேதி..! இப்படி ஒரு கனமழை வருமாம்..!

By thenmozhi gFirst Published Dec 4, 2018, 2:35 PM IST
Highlights

தற்போது தென் மேற்கு வங்கக் கடலில் நிற்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நேற்று முதல் தமிழகம் கடலோர மாவட்டங்களில் மிதமான  மழை பெய்து வருகிறது.

தற்போது தென் மேற்கு வங்கக் கடலில் நிற்கும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, நேற்று முதல் தமிழகம் கடலோர மாவட்டங்களில் மிதமான  மழை பெய்து வருகிறது.

மேலும் காரைக்கால், டெல்டா மாவட்டம், புதுக்கோட்டை உள்ளிட்ட  இடங்களிலும் ஓரளவிற்கு மழை பெய்து வருகிறது.

சென்னையை பொறுத்தவரை, இரவு முழுக்க மிதமான மழையும், ஆங்காங்கு லேசான மழையும் பெய்து வருகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, அடுத்த 2 நாட்களுக்கு சென்னை மற்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பரவலாக மிதமான மழை தொடரும் என்றும் நாளையும், நாளை மறுநாளும் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மீண்டும் செக் வைக்கும் 6  ஆம் தேதி..!  

வரும் 6  ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு  பகுதியாக தீவிரம் அடைய உள்ளது. இதன் காரணமாக வட தமிழகம்  மிதமான  மழையும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில்  கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மேலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல  வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆறாம்  தேதிக்கு  பின், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி புயல் சின்னமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர்கள்  தெரிவித்து உள்ளனர்.

click me!