திருமண மண்பங்களில் மதுபானம் சட்டத்திருத்தம் நீக்கம்... அறிவித்தது தமிழக அரசு!!

By Narendran S  |  First Published Apr 24, 2023, 9:08 PM IST

திருமண மண்பங்களில் மதுபானம் விருந்து நடத்தலாம் என்ற அரசானை நீக்கம் செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. 


திருமண மண்பங்களில் மதுபானம் விருந்து நடத்தலாம் என்ற அரசானை நீக்கம் செய்து அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. இதுக்குறித்து வெளியான அரசிதழில்,வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் ங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு, தமிழ்நாட்டிலும் வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன. 

இதையும் படிங்க: குடிமகன்களுக்கு குட்நியூஸ்.. திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்.!

Tap to resize

Latest Videos

இதுகுறித்து பெறப்பட்ட கருத்துக்களை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் உள்ள மாநாட்டு மையங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை இன்று வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: திருமண மண்டபங்களில் மதுபானங்களுக்கு அனுமதியா.? வாய்ப்பே இல்லையென மறுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி

அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!