பெரம்பலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மற்றும் சிறுமியை திருமணம் செய்ய முயன்ற நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமம் ஒன்றில் குழந்தை திருமணம் நடக்க இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல் துறை உதவியுடன் சென்று திருமணத்தை நிறுத்தி சிறுமியை மீட்டனர்.
சிறுமியை மீட்ட அவர்கள் குழந்தை திருமணம் செய்ய முயன்ற தர்மதுரை என்ற நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் சிறுமியை காதலித்து திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெரம்பலூர் அருகே கோனேரிபாளையத்தில் இயங்கி வரும் பெந்தகோஸ்தே திருச்சபை எனும் கிறித்துவ ஆலய பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன் ராஜ் என்பவர் சிறுமியை 8 மாதத்திற்கு முன்பு கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. மேலும் சிறுமியை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
கோவில் திருவிழாவை பார்த்த அசதியில் தண்டவாளத்தில் உறங்கிய 3 பேர் ரயிலில் அடிபட்டு பலி
இதனையடுத்து பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் சட்ட சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன் ராஜ் மற்றும் குழந்தை திருமணம் செய்ய முயன்ற தர்மதுரை என்பவரை பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கலா தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சங்கர் என்பவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் படுகொலை; மனைவி, கள்ளக்காதலன் கைது