பெரம்பலூர் அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் மர்ம மரணம் - காவல் துறை விசாரணை

By Velmurugan s  |  First Published Mar 30, 2023, 10:43 AM IST

பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் கழிவறையில் பெண் ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியைச் சேர்ந்தவர் அசலாம்பாள் (வயது 50). இவருக்கு ஒரு மகன் மற்றும் மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் அசலாம்பாவின் மூன்றாவது மகள் லலிதாவிற்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

பிரசவத்தின் போது மகளுக்கு உதவியாக அசலாம்பாளும் கடந்த நான்கு நாட்களாக அவருடனே தங்கி வந்துள்ளார். இன்று காலை அசலாம்பாளின் கணவர் ராமசாமி மகள் லலிதாவை  வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த போது மனைவி அசலாம்பாலை காணவில்லை என கூறப்படுகிறது. மருத்துவமனையில் பல இடங்களில் தேடியும் அசலாம்பாள் எங்கும் கிடைக்கவில்லை. மேலும் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் தேடிச் சென்று அசலாம்பாள்  கிடைக்காததால் மீண்டும் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து; ஒருவர் பலி, 2 பேர் கவலைக்கிடம்

அப்போது மருத்துவமனை கழிவறையில் பெண் ஒருவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மருத்துவமனையில்  உள்ளவர்கள் பேசிக்கொண்டனர். இதனையடுத்து ராமசாமி  தற்கொலை செய்து கொண்ட பெண்ணை நேரில் சென்று பார்த்தபோது அது அசலாம்பால் தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பலூர் நகர காவல் துறையினர் அசலாம்பாலின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனையில் உள்ள பினஅறைக்கு அனுப்பி வைத்தனர். அசலாம்பாலின் தற்கொலை குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!