பெரம்பலூரில் சாமி சிலைகள் உடைப்பு; காவல் துறை விசாரணை

By Velmurugan s  |  First Published Feb 16, 2023, 7:12 PM IST

பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் காட்டு பகுதியில் அமைந்துள்ள  அய்யனார் முத்துசாமி கோவிலில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட நாரணமங்கலம் கிராமத்திலிருந்து காரை செல்லும் சாலையில் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள அய்யனார் முத்துசாமி திருக்கோவில். கோவிலின் உள்ளே சுமார் 8 சிலைகள் உடைந்த நிலையில் கிடந்ததை பார்த்த கோவில் பூசாரிகள் சுந்தராஜ், ராஜ் ஆகியோர் பாடாலூர்  காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். \

Tap to resize

Latest Videos

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பாடாலூர் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அய்யனார் முத்துசாமி கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில் நேற்று கோவிலில் யாரும் இல்லாததை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள்  கோவிலில் இருந்த சுமார் 8 சிலைகளை உடைத்து சேதப்படுத்தியது தெரியவருகிறது.

ஆமைகளை பாதுகாக்கும் பொருட்டு குமரி கடலில் விடப்பட்ட 110 ஆமை குஞ்சுகள்

ஏற்கனவே கடந்த ஆண்டு இதேபோல் இதே கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள சிறுவாச்சூரில்  காட்டு பகுதியில் அமைந்துள்ள பெரியசாமி கோவிலிலும் இதே போன்று கோவிலின் சிலைகளை  மர்ம நபர்கள் உடைத்து சென்றது குறிப்பிடதக்ககு. கோவிலின் சிலைகளை உடைத்தது யார்? எதற்காக உடைத்தனர்? என்று பாடாலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் பிரிவினர் மற்றும் கைரேகை தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து சிலைகளை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர். கும்பாபிஷேகம் பணிகள் நடைபெற்று வந்த இந்த சூழலில் கோவிலின் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!