பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 7 லட்சம் பணம், 13 சவரன் நகை கொள்ளை

By Velmurugan s  |  First Published Feb 14, 2023, 7:42 PM IST

பெரம்பலூர் மாவட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 7 லட்சம் பணம் மற்றும் 13 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டத்தை அடுத்த நெடுவாசல் கிராமம் தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் அப்பாதுரை மனைவி தமிழரசி (வயது 55). இவர்களுக்கு பாலமுருகன், விஜயகுமார் என்ற இரு மகன்களும் பானுப்பிரியா என்ற ஒரு மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகிய நிலையில் இரு மகன்களும் வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். பானுப்பிரியா அருணகிரி மங்கலத்தில் மாமியார் வீட்டில் கணவருடன்  வசித்து வருகிறார். 

தமிழரசி மற்றும் அவரது மகன்களுடன் நேற்று இரவு தனது சம்மந்தி வீட்டிற்கு உறங்க சென்றுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 3 பேரின் வீட்டிற்கும் சென்று வீட்டின் பூட்டை உடைத்து  பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  தமிழரசி இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்த நிலையிலும் பீரோவில் இருந்த துணிகள் கலைந்து கீழே தள்ளி விடப்பட்டு கிடந்துள்ளது. 

Tap to resize

Latest Videos

கோவையில் தனியார் கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர்கள் இடையே கடும் மோதல்

இதனால் அதிர்ச்சி அடைந்த  தமிழரசி தனது மகன்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர்கள் மருவத்தூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் 3 பேரின் வீடும் திறந்த கிடந்த நிலையில் தமிழரசி வீட்டின் பூட்டை மட்டும் உடைத்து வீட்டிலிருந்த 12 சவரன் நகைகள் மற்றும் 7 லட்சம் பணம் கொள்ளை போனதாக தெரியவருகிறது. 

மாநில அளவிலான கபடி போட்டி; வீரர்களுடன் கபடி விளையாடி மகிழ்ந்த நடிகர் கிங்காங்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். உண்மையில் கொள்ளை போனது 7 லட்சம், மற்றும் 13 சவரன் நகை கொள்ளையா என்றும் சந்தேகத்துடனும்  விசாரணை நடைபெற்று வருகிறது.

click me!