BREAKING: குடிமகன்களுக்கு குட்நியூஸ்.. திருமண மண்டபங்களில் மதுபானம் பரிமாற அனுமதி.. ஆனால் ஒரு கண்டிஷன்.!

திருமண மண்டபம் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த சிறப்பு அனுமதி பெற்று பரிமாறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

Liquor allowed in marriage halls... Tamil Nadu Government Announcement

பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் மட்டுமே மதுபானம் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி விளையாட்டு மைதானங்கள், திருமண மண்டபங்களிலும் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- திருமண மண்டபங்கள்  விளையாட்டு, மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை பரிமாறலாம். மாவட்ட ஆட்சியரும், மதுவிலக்கு துணை ஆணையர்கள் இதற்கான அனுமதியை வழங்குவார்கள்.

இதையும் படிங்க;- திமுகவிற்கு செக் வைக்கிறதா மத்திய அரசு..! ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் ஐடி சோதனை

Liquor allowed in marriage halls... Tamil Nadu Government Announcement

பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- பிடிஆர் பேசிய ஆடியோ பொய்யானதா.? நான் பேசுவது போல் ஒலிநாட தயாரித்து வெளியிட முடியுமா.? சவால் விட்ட அண்ணாமலை

Liquor allowed in marriage halls... Tamil Nadu Government Announcement

இதனால் டாஸ்மாக்கை தவிர பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருநாள் நடைபெறும் நிகழ்ச்சிக்கு கூட அனுமதி பெற்று மதுபானம் பரிமாறலாம்  என குறிப்பிடப்பட்டுள்ளது.  உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி வெளியிட்ட அரசிதழ் F.L.2 என்ற லைசென்ஸ்க்கான கட்டணம் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios