சித்திரை திருவிழா; யாராக இருந்தாலும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி - ஆய்வு கூட்டத்தில் அதிரடி

By Velmurugan s  |  First Published Apr 24, 2023, 8:14 PM IST

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு அமைச்சர்கள், ஆட்சியர், அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.


மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சித் தலைவர் அனீஸ்சேகர், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநகர மேயர் இந்திராணி, மாநகர காவல் ஆணையர் நரேந்திர நாயர்,  உயரதிகாரிகள் கலந்து கொண்டு சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசும் போது, சித்திரை திருவிழாவில் கடந்த ஆண்டு போல இந்தாண்டு எந்தவொரு நிகழ்வும் நடக்க கூடாது. கடந்த ஆண்டு நான் நேரில் வந்து ஆய்வு செய்தும் தவறுகள் நடந்துள்ளன. மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தில் பாஸ் வழங்குவதில் குளறுபடிகள் ஏற்பட்டது. எந்தவொரு அதிகாரியும் பாஸ் இல்லாமல் கோவிலுக்கு உள்ளே விடக்கூடாது.

Tap to resize

Latest Videos

undefined

கடந்த ஆண்டு நடைபெற்ற விழா கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் கழித்து நத்தப்பட்ட விழா என்பதால் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. மேலும் சில விரும்பத்தகாத தவறுகளும் நடைபெற்றது என்றார்.

மேலும் போக்குவரத்து நெரிசல் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. பார்க்கிங் வசதி எங்கெல்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதை முன்கூட்டியே மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுப்படுத்தப்பட உள்ளனர். அதோடு அழகர் வரும் சாலையான புதூர் மூன்றுமாவடி உள்ளிட்ட பகுதிகளில் 130 CCTV கேமரா புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. போலீஸ் உடை, சாதாரண உடையில் குற்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!