நிதி அமைச்சர் ஆடியோ பற்றி மத்திய அரசு விசாரணை தேவை: ஈபிஎஸ் வலியுறுத்தல்

By SG Balan  |  First Published Apr 23, 2023, 6:46 PM IST

பிடிஆர் ஆடியோ விவகாரம் பற்றி மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனச்சாமி வலியுறுத்துகிறார்.


நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ உண்மையானதா என மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா மற்றும் மாவட்ட செயலாளர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது கட்சியினர் இடையே பேசிய ஈபிஎஸ், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்துக்குப் பின் முதல் முறையாக மதுரை வந்துள்ளதாவும் மதுரை அதிமுகவுக்கு ராசியான மண் என்றும் சொன்னார்.

Tap to resize

Latest Videos

undefined

PTR Audio: நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது! நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!!

பின், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், சமூக வலைதளங்களில் பரவிவரும் நிதி அமைச்சரின் ஆடியோ உண்மையானதுதான் என்றும் 30 ஆயிரம் கோடி விவாகரத்தை நாங்கள் கவர்னரிடம் புகார் அளிப்போம் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

திமுக அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்ற அவர் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ளது எனவும் சாடினார். எதற்கெடுத்தாலும் அறிக்கை விடும் முதல்வர் இந்த ஆடியோ விவகாரம் பற்றி ஏன் அறிக்கை வெளியிடவில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

பிடிஆர் பதிலை திமுக ஐடி விங்கை தவிர யாரும் நம்பமாட்டார்கள்: அண்ணாமலை

12 மணிநேர வேலை தொடர்பான சட்ட மசோதா பற்றி பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "எதிர்க்கட்சியாக இருந்தபோது எதிர்த்தவர்கள் இப்போது தாங்களே அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு கூட்டணக் கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன" என்று குறிப்பிட்டார். "இந்த அரசு முதலாளிகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது. ஒரு தொழிலாளியை 8 மணிநேரம் வேலை 8 மணி நேர உறக்கம் 8 மணி நேரம் ஓய்வு என்று இருக்க வேண்டும். மனிதன் ஒன்று மிஷின் அல்ல" எனவும் ஈபிஎஸ் கூறினார்.

கொடநாடு கொலை வழக்கில் மர்மம் இருப்பது உண்மை. எங்கள் அரசுதான் அந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்தது. ஆனால், திமுக அரசு பயங்கர செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜாமீன் கொடுத்து, அவர்களுக்காக வாதாடியது" எனச் சாடினார். மேலும், அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் தொடர்கிறது என்ற ஈபிஎஸ், "கூட்டணி குறித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா போன்றவர்களிடம்தான் பேசுவோம். வேறு யாரைப் பற்றியும் பேசவேண்டியது இல்லை" என்றார்.

திருமணத்துக்கு வற்புறுத்திய காதலி கொடூரக் கொலை! 4 ஆண்டு லிவ் இன் வாழ்க்கையில் நேர்ந்த துயரம்

click me!