காவிரி கரையோரங்களில் சிறப்பாக நடைபெற்ற ஆடிபெருக்கு விழா.. ஏராளமான மக்கள் குவிந்து புனித நீராடல்

By Thanalakshmi VFirst Published Aug 3, 2022, 12:38 PM IST
Highlights

தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணை மற்றும் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து காவிரி ஆற்றில் நீராட வந்த பொதுமக்களை போலீசார் திருப்பி அனுப்பினர்.
 

ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்நாளில் புதுமண தம்பதி காவிரி ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் ஓகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிபெருக்கு விழாக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக, மேட்டூர் அணை நிரம்பி, உபர் நீர் காவிர் ஆற்றில் திறத்துவிடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  காவிரி கரையோர பகுதிகளில் ஆடி 18 விழா வெகு சிறப்பாக கொண்டாப்படும் சூழலில், இன்று காவிரி ஆற்றில் புனித நீராட ஏராளமான மக்கள் கூடுவர். அதனை கருதில் கொண்டு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்கள் யாரும் நீராட தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆற்றங்கரையோரம் சென்று செல்பி எடுக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றில் குளிக்க, செல்பி எடுக்கத தடை... காரணம் இதுதான்!!

மேட்டூர் அணையின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் வரத்து 1,41,000 கன அடியாக அதிகரித்துள்ளது.  அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 1,40,500 கன அடியாக உள்ளது.இந்நிலையில் காவிரியாற்றில் அதிக அளவு தண்ணீர் வருவதையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி ஆற்றில் புதுமண தம்பதிகள், பெண்கள் ஆடிபெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

மேலும் படிக்க:Watch : ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு! காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!

தம்பதிகள் தங்களது திருமண தாலி மற்றும் திருமண மாலையை பிரித்து ஆற்றில் விட்டும், காவிரி தாய்க்கு பழங்கள், காய்கறிகள், அரிசி உள்ளிட்டவை வைத்தும் படையல் இட்டு வழிபாடு செய்தனர். இந்நிலையில் காவிரி கரையில் ஆடிபெருக்கு விழா கொண்டாட வருபவர்கள், பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று காவல்துறையின் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் காவிரி கரையோர பகுதிகளான கருமண்டபம், கீதாபுரம், ஓடத்துறை,அய்யாளம் மன்படித்துறை உள்ளிட்ட 63 இடங்களில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மக்கள் புனித நீராடி ஆடிபெருக்கை கொண்டாடி வருகின்றனர். இதற்கு இடையில் காவிரி கரையிலே காவல்துறையினர் கட்டுபாட்டு அறைகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் படித்துறை அருகே ஏராளமான இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:Watch : தென்காசியில் தொடரும் கனமழை! நிரம்பி வழியும் அணைகள்!

click me!