விடாது ஊற்றும் கனமழை.. நிரம்பி வழியும் அணைகள்.. தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் !!

By Thanalakshmi V  |  First Published Aug 3, 2022, 10:46 AM IST

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 
 


தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:கனமழை எச்சரிக்கை - நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை !!

Tap to resize

Latest Videos

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக  இன்று தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுபோல், நீலகிரி, ஈரோடு, தருமபுரி , கிருஷ்ணகிரி,நெல்லை, குமரி, மதுரை , விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:Watch : தென்காசியில் தொடரும் கனமழை! நிரம்பி வழியும் அணைகள்!

இந்நிலையில் சென்னையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.கோயம்பேடு, ராயப்பேட்டை, எழும்பூர், புரசைவாக்கம், பெரம்பூர், அம்பத்தூர், கிண்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

71 அடி கொண்ட வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் 7 பிரதான மதகுகள் மூலம் அணைக்கு வரும் உபரி நீர் வைகை ஆற்றில் திறத்து விடப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க:Watch : ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு! காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு!

இதுபோல் தேனி மாவட்டம் சோத்துபாறை அணை முழு கொள்ளளவான 126 அடியை எட்டியுள்ளதால், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சோத்துபாறை அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வராக நதி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது

click me!