தனி நபர் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்தீர்களா..? நாடாளுமன்றத்தில் பாஜகவை அலறவிட்ட திருச்சி சிவா

By Ajmal KhanFirst Published Aug 3, 2022, 9:35 AM IST
Highlights

ஒரு மனிதன் இறந்து சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டால் அங்கேயும் 18 சதவீத வரி விதிக்கப்படுவதாக மாநிலங்களவையில் திமுக எம்.பி.திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக ஆட்சியில் 70% வாக்குறுதிகள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்ற வருகிறது. இதில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றம் என அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகிறது. நேற்று மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா உரையாற்றினார். அப்போது  பேசிய அவர் தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகியுள்ளது. அதற்க்குள் 70% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறினார். பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. பால் விலை 3 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்து 8 வருடங்கள் ஆகிவிட்டது.  2014 தேர்தலின்போது நல்ல நாட்கள் வரும் என பிரதமர் மோடி வாக்குறுதி தந்ததாக தெரிவித்தார் ஆனால் நல்ல நாட்கள் வரவில்லை மோசமான நாட்கள் தான் வந்திருப்பதாக கூறினார்.

கோமியத்துக்கு 50% கூட வரி போடுங்க.! குழந்தைகள் சாப்பிடும் பால்,தயிருக்கு வரி ஏன்.?பாஜகவை அலறவிட்ட திமுக எம்.பி

15 லட்சம் டெபாசிட் செய்தீர்களா..?

ஓராண்டு மட்டுமே ஆயிருக்கும் திமுக அரசை பார்த்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு விட்டீர்களா என மத்திய நிதி அமைச்சர் கேள்வி எழுப்புகிறார். ஆனால் பாஜக அரசு ஆட்சிக்கு வந்து எட்டு ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றுனீர்கள்  என கேள்வி எழுப்பினார். 2014 ஆண்டு தேர்தலின் போது  கருப்பு பணத்தை ஒழித்துவிட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் வாக்குறுதி கொடுத்தீர்கள் அதனை நிறைவேற்றி விட்டீர்களா? வங்கியில் செலுத்தி விட்டீர்களா என கேள்வி எழுப்பினார். ஆனால் எந்த வித வாக்குறுதியும் கொடுக்காமல் பாஜக மக்களை ஏமாற்றி விட்டதாக தெரிவித்தார். பண மதிப்பிழப்பு காரணமாக பொதுமக்கள் மட்டுமில்லாமல் சிறுகுறு நிறுவனங்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

usd vs inr: nirmala sitharaman: இந்திய ரூபாய் மதிப்பில் வீழ்ச்சியா! அப்படி ஏதும் இல்லையே:சீதாராமன் உறுதி

சுடுகாட்டிற்கும் 18% வரி

கொரோனா பாதிப்பு காலகட்டத்தில் மத்திய அரசு அறிவித்த திட்டமிடப்படாத பொது முடக்கத்தின் காரணமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், ஒட்டுமொத்த நாடும் வேதனையை அனுபவித்ததாக குறிப்பிட்டார். ஆனால் இந்த காலகட்டத்தில்  கார்ப்பரேட் நிறுவனங்கள் பல மடங்கு தங்கள் வருவாயை ஈட்டியதாக குறிப்பிட்டார். மத்திய அரசு ஜிஎஸ்டி வரி பால், தயிர் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பென்சில், ரப்பருக்கும் வரி விதித்துள்ளதாக குறிப்பிட்டவர்,  ஒரு மனிதன் இறந்து சுடுகாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டால் அங்கேயும் 18 சதவீத வரி விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டினார். 

இதையும் படியுங்கள்

தொழிலாளர்களை வஞ்சிக்கும் திமுக...கொடுத்த வாக்குறுதியை ஓராண்டாக ஏமாற்றி சாதனை..! ஸ்டாலினை சீண்டிய அண்ணாமலை

 

click me!