சித்ரா மரணத்தில் இரு முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு? நீதிமன்றத்தில் ஹேம்நாத் அதிர்ச்சி தகவல்.!

By vinoth kumar  |  First Published Aug 3, 2022, 7:06 AM IST

சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை ஹேம்நாத் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தெரிவித்துள்ளார்.


சின்னத்திரை நடிகை சித்ரா மரணத்தில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி கணவர் ஹேம்நாத் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக ஹேம்நாத் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தன் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல்துறை விசாரணைக்கு தடை விதித்தும், மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஹேம்நாத் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என இடையீட்டு மனுவை சித்ராவின் தந்தை காமராஜ் தாக்கல் செய்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- VJ Chitra :ஹேம்நாத்தை யூஸ் பண்ணிட்டு கழட்டிவிட்ருனு சொன்னேன், அவ கேட்கல- சித்ராவின் தோழி வெளியிட்ட பகீர் தகவல்

undefined

அந்த மனுவில், தன்னுடைய மகள் சித்ராவின் முகத்தில் காயங்கள் காணப்பட்டதால், ஹேம்நாத்தை சந்தேகிப்பதாகவும், நாடகத்தில் சக நடிகர்களுடன் நெருக்கமாக நடிக்க கூடாது என சித்ரவதை செய்த ஹேம்நாத்தால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தனது மகள் சித்ரவதை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சித்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் தனது பெண் தோழிகளை ஹேம்நாத் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாகதாகவும், இருவரும் ஒன்றாக இருக்கும் போதுதான் தனது மகள் தற்கொலை செய்துள்ளதாகவும் காமராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஹேம்நாத் தரப்பில் வாதிடுகையில்;- சித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வருமானம் ஈட்டுபவராக இருந்தார். குடும்ப செலவுக்காக சித்ராவை மட்டுமே நம்பியிருந்ததை சித்ராவின் தாய் பலமுறை கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. வரதட்சணை எதுவும் கேட்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. சித்ராவை தாக்கியதாக கூறுவது தவறு. அவரது மரணம் தற்கொலை தான் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க;- சித்ரா இறந்த பின் 11 பெண்களுடன் உல்லாசம்... பிரபல தொகுப்பாளினியை கர்ப்பமாக்கிய ஹேம்நாத் - வெளியான பகீர் தகவல்

மேலும், சித்ராவின் மரணத்தில் முன்னாள் அமைச்சர்கள் இருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், ஆனால் அது குறித்து தனக்கு முழுமையாக தெரியவில்லை என்றார். குறுக்கிட்ட நீதிபதி எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அவர்களுக்கு தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் தன்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும். சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்தக்கூடாது.  தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தனக்கு தெரியாது எனவும் ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி குறுக்கிட்டு அந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை கூறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அவர்களுக்குத் தொடர்பு இல்லையென்றால் இந்த விவகாரத்தில் ஏன் என்னை இந்த அளவுக்கு சிக்க வைக்க வேண்டும். சித்ராவின் கணவர் என்பதாலேயே கொலை குற்றச்சாட்டு சுமத்தக் கூடாது. தற்கொலை செய்து கொண்ட இடத்தில் என்ன நடந்தது என்று கூட தெரியாது என ஹேம்நாத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, நடிகை சித்ராவின் மரணம் தொடர்பான வழக்கில் ஹேம்நாத் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் உள்ளதால் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது எனக் கூறிய நீதிபதி அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் விசாரணை நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொள்ளவும் ஹேம்நாத்துக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க;- நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா ? ஜெயக்குமார் சொன்ன பகீர் தகவல்..!

click me!