வங்கக்கடலில் உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாறுமா..? வானிலை மையம் அறிக்கை

By Thanalakshmi VFirst Published Nov 4, 2022, 5:09 PM IST
Highlights

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நவ.9 ஆம் தேதி உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கரையை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 

வட கிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் பரவலாக மழைபெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கனமழை காரணமாக, இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 

மழை காரணமாக தமிழகத்தில் முக்கிய அணைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், 8 மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:நாளை எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை.. 11 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. வெதர் அப்டேட்

இந்நிலையில் இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வரும் 9 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து கேரளா கடல் பகுதியில் நிலைக்கொண்டுள்ளது.

இதனிடையே நவ.9 ல் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி கரையை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:அடிச்சு தூக்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. இதோ முழு விவரம்..!

click me!