திருமணமான புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் கணவர் தற்கொலை செய்தியை அறிந்த மனைவி கதறி துடித்தார்.
திருமணமான புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் கணவர் தற்கொலை செய்தியை அறிந்த மனைவி கதறி துடித்தார்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் இடையத்தான்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் ராஜாராம்(26). இவருக்கும் செட்டித்திருகோணம் கிராமத்தை சேர்ந்த தனபால் என்பவரின் மகளுக்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயம் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து கடந்த 30-ம் தேதி திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் இவரது குடும்பத்தினர் கருப்பசாமி கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பினர்.
undefined
இதையும் படிங்க;- குலதெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது குளத்தில் கவிழ்ந்த கார்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி.!
இந்நிலையில், ராஜாராம் பக்கத்து கிராமமான அரனூரில் பருத்தி வயலில் உள்ள வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க;- 4 நாளில் முடிந்து போன திருமண வாழ்க்கை.. கார் விபத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த புதுமண தம்பதி..!
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜாராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- திருவள்ளூரில் பயங்கரம்.. திருமணம் செய்து கொள்ளுமாறு பெற்றோர் வற்புறுத்தல்.. இளம்பெண் தீக்குளித்து தற்கொலை.!