கோவிலுக்கு சென்று ஊர் திரும்பிய போது பயங்கரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு.!

By vinoth kumar  |  First Published May 24, 2022, 7:37 AM IST

காரை ஓட்டி வந்த கார்த்திகேயன், அவரது தாய் மஞ்சுளா, மனைவி லட்சுமிபிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய இரண்டு குழந்தைகளில்  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஒரு மகள் உயிரிழந்தார். மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


அரியலூர் அருகே மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(45). அங்குள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர், தனது மனைவி லட்சுமிபிரியா(35), தாய் மஞ்சுளா(62), குழந்தைகள் மித்ரா(13), யாஷினி(8) ஆகியோருடன் ராமேஸ்வரம் சென்று விட்டு, காரில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, கார் தஞ்சாவூர் - அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி புளியமரத்தில் பயங்கரமாக மோதியது. இதில், காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

இதையும் படிங்க;-  மெரினா பீச்சில் கண்ட இடத்தில் கை வைத்து அத்துமீறிய காதல் ஜோடி.. தட்டிக்கேட்ட வக்கீல்களுக்கு மண்டையில் 5 தையல்

Tap to resize

Latest Videos

undefined

இதில், காரை ஓட்டி வந்த கார்த்திகேயன், அவரது தாய் மஞ்சுளா, மனைவி லட்சுமிபிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய இரண்டு குழந்தைகளில்  மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஒரு மகள் உயிரிழந்தார். மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தூக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- வெட்ட வெளியில் பூங்காவை படுக்கை அறையாக மாற்றிய காதல் ஜோடிகள்... காமக்களியாட்டம் போடும் இளசுகள்..!

click me!