பார்த்ததுமே பத்திக்கிச்சு.. பள்ளி மாணவனை இழுத்துக்கொண்டு ஓடிய ஆசிரியை.. 3 மாதம் நடந்தது என்ன?

By vinoth kumar  |  First Published Dec 29, 2021, 9:26 AM IST

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மழவராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.அதே பள்ளியில் பக்கத்து ஊரை சேர்ந்த 24  வயது இளம்பெண் பயிற்சி ஆசிரியையாக சேர்ந்து வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து, மாணவனுக்கு வகுப்பு எடுக்க சென்றபோது, ஆசிரியைக்கு அந்த மாணவனை பார்த்துமே ரொம்ப பிடித்துவிட்டது. 


பள்ளி மாணவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டதோடு, அவருடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மழவராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் பக்கத்து ஊரை சேர்ந்த 24  வயது இளம்பெண் பயிற்சி ஆசிரியையாக சேர்ந்து வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து, மாணவனுக்கு வகுப்பு எடுக்க சென்றபோது, ஆசிரியைக்கு அந்த மாணவனை பார்த்துமே ரொம்ப பிடித்துவிட்டது. அதேபோல், அந்த மாணவனுக்கு ஆசிரியை பிடித்துவிட்டது. விடுமுறை நாட்களில் இருவரும் அடிக்கடி வெளியே சுற்றியுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இந்த விவகாரம் நாளடைவில் ஆசிரியையின் வீட்டிற்கு தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை கடுமையாக கண்டித்தனர். ஆனால், இதை ஆசிரியை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதேபோல் மாணவர் வீட்டிற்கும் வி‌ஷயம் தெரிந்து அவரையும் பெற்றோர் கண்டித்துள்ளனர். அப்படி இருந்த போதிலும் மாணவர்-ஆசிரியை காதல் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது. 

இந்நிலையில், நம்முடைய காதலுக்கு இருவீட்டார் பெற்றோர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால் வீட்டை வெளியே முடிவு செய்தனர்.  கடந்த அக்டோபர் மாதம் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள மாணவனின் தாய் வழி பாட்டி வீடான தங்கம் என்பவரது வீட்டிற்கு வந்தனர். இதனையடுத்து, யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், அவர்களுக்கு  நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரித்ததால் சேர்ந்து வாழ முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்ய முடிவு செய்தனர். பின்னர், காதல் ஜோடி இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.

இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக தகவலறிந்த குன்னம் போலீசார் ஆசிரியை மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தற்போது ஆசிரியை குணமடைந்த நிலையில் அவரை குன்னம் போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவணை ஆசிரியை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!