மாணவர்களுக்கு குட்நியூஸ்... அரியலூர் மாவட்டத்திற்கு ஜூலை 26ல் உள்ளூர் விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Jul 19, 2022, 12:47 PM IST

அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதா அம்மாவட்ட ஆட்சியர்  ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.


மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கங்கை கொண்ட சோழபுரத்தை தலைமையிடமாக கொண்டு அரண்மனை அமைத்து மாமன்னர் ராஜேந்திர சோழன் ஆட்சி செய்தார். மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும்.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க;- ரயில்பெட்டி மீது ஏறி செல்ஃபி.. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பள்ளி மாணவன் உயிரிழப்பு..!

இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 26ஆம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதா அம்மாவட்ட ஆட்சியர்  ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க;- விடியல் ஆட்சி தரப்போறோம் சொல்லிட்டு! ஒவ்வொரு தலையிலும் இடியை இருக்கிறீங்களே நியாயமா!திமுகவை வச்சு செய்யும் TTV

click me!