தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. ஆனால் அந்த 6 இடங்களில் அனுமதி இல்லை!

By Raghupati RFirst Published Nov 4, 2022, 4:56 PM IST
Highlights

தமிழகத்தில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழ்நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி டி.ஜி.பி உள்ளிட்டோரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்:

எனவே அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை சுப்பிரமணியன், கடலூர் சண்முகசுந்தரம், ஈரோடு செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி நீதிபதி ஜி.கே இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க..2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி

நீதிமன்றத்தில் வழக்கு:

ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை காரணமாக பல மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அப்போது காவல்துறையின் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில்,  தமிழகத்தில் வருகிற நவம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், தற்போதைய சூழல் காரணமாக 23 இடங்களில் உள்ளரங்கு கூட்டமாக நடத்திக்கொள்வதாக இருந்தால் அவற்றிற்கு அனுமதி வழங்க தயாராக உள்ளோம்.

தமிழ்நாடு காவல்துறை:

ஆனால் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது’ என்று தெரிவிக்கப்பட்டது. பிறகு பேசிய நீதிபதி, உளவுத்துறை அறிக்கையை பார்த்த பிறகு மீதமுள்ள 47 இடங்களில் அனுமதி வழங்க வேண்டுமா வேண்டாமா என உத்தரவு பிறப்பிப்பதாக கூறி, வழக்கின் விசாரணையை வரும் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இன்று நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இறுதியாக நீதிபதி விதித்த உத்தரவில், காவல்துறை மூடி முத்திரையிட்டு தாக்கல் செய்த உளவுத்துறை அறிக்கைகள் முழுமையாக ஆராயப்பட்டதாகவும்,  கடந்த ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைதான் காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்தார். புதிய வழக்குகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இதையும் படிங்க..கேட்டது 50 இடம்! கிடைச்சது 3 மட்டும்.. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு குறைந்த இடங்களில் அனுமதி கொடுத்த காவல்துறை

44 இடங்களுக்கு அனுமதி:

கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூரில் பல்லடம், கன்னியாகுமரியில் அருமனை, நாகர்கோவிலில் நான்குனேரி ஆகியவற்றை தவிர மற்ற இடங்களில் அனுமதி வழங்கலாம். இந்த 6 இடங்கள் தவிர காவல்துறை அனுமதி வழங்கிய 3 இடங்கள்  உள்ளிட்ட 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

உள்ளரங்கு கூட்டமாக பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் அரங்குகளாக இல்லாமல் விளையாட்டு திடல்களை தேர்ந்தெடுக்கலாம் என்றும்,  6 இடங்களில் மட்டும் இயல்பு நிலை திரும்பும்வரை ஆர்.எஸ்.எஸ். காத்திருக்க வேண்டும் என்றும்,  இந்த 6 இடங்களில்  2 மாதங்களுக்கு பிறகு புதிய மனு கொடுக்கலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

இதையும் படிங்க..யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!

click me!