தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயம்.! எந்த எந்த ஊர் தெரியுமா.? வெளியான அரசிதழ்

தமிழகத்தில் மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக 7 புதிய நகராட்சிகள் உருவாக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி மற்றும் பெருந்துறை ஆகிய ஊராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

7 new municipalities have been created in Tamil Nadu KAK

New municipalities Tamil Nadu : அரசின் திட்டங்களை அந்த அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு உரிய வகையில் கொண்டு செல்வதற்கு மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் படி, மக்கள் தொகை அடிப்படையில் ஏற்கனவே ஊராட்சி அமைப்புகள் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் படி கிராமப்புறத்தில் 12,618 கிராம ஊராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள்,  36 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. நகர்ப்புறத்தில் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள் உள்ளன. மேலும் 25 மாநகராட்சிகள்,  148 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள்  உள்ளது. 

பெண்களுக்கு ஜாக்பாட்.! இனி சொத்துகளை பதிவு கட்டணம் அதிரடியாக குறைப்பு - வெளியான அரசாணை

Latest Videos

மக்கள் தொகை- புதிய நகராட்சிகள்

இது போல பல அமைப்புகள் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குக்கிராமங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாக இருந்தது. தற்போது நகர்ப்புரங்களில் வாழும் மக்கள் தொகை சதவீதம் மேலும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து அவ்வப்போது மக்கள் தொகையை பொறுத்து நகராட்சி அதிகரிக்கப்பட்டு வருகிறது. 

7 புதிய நகராட்சிகள் உதயம்

இதன் படி தற்போது புதிதாக 7 நகராட்சிகள் உருவாக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்து. இதனையடுத்து இதற்கான அரசிதழ் தற்போது வெளியாகியுள்ளது. போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவிநாசி மற்றும் பெருந்துறை 7 புதிய நகராட்சி மன்றங்களை (Municipal Councils) அமைத்து உருவாக்கி ஆணைகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்  வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளை பரிசீலித்த , நகராட்சியில் குறிப்பிடப்பட்ட முழு உள்ளாட்சிப் பகுதிகளையும் இதன்மூலம் அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மாநகராட்சி கவுன்சிலர்கள் 4 பேர் டிஸ்மிஸ்.! எந்த கட்சியை சேர்ந்தவர்கள் .? எதற்காக தெரியுமா.?

எந்தெந்த ஊராட்சி .?

  • போளூர் டவுன் பஞ்சாயத்து 
  • செங்கம் டவுன் பஞ்சாயத்து
  • கன்னியாகுமரி டவுன் பஞ்சாயத்து
  • சங்ககிரி டவுன் பஞ்சாயத்து
  • கோத்தகிரி டவுன் பஞ்சாயத்து
  • அவிநாசி டவுன் பஞ்சாயத்து
  • பெருந்துறை டவுன் பஞ்சாயத்து ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படையில், அடுத்த பொதுத் தேர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
vuukle one pixel image
click me!