ருத்ரதாண்டவம் ஆடிய கியார் புயல், கடலுக்கு போன 50 மீனவர்கள் எங்கே..?? கதறும் மீனவர்கள்..!!

By Ezhilarasan BabuFirst Published Dec 11, 2019, 1:46 PM IST
Highlights

 ஜெர்மியா, லூர்து அன்னை, புனித மேரி, கார்மேல் மாதா,  பசிலிக்கா படகில் சென்ற 59 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை.

கியார்க் புயலில் காணாமல் போன  மீனவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்புக்குழு அமைக்க கோரிய வழக்கில் தமிழக அரசு விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.  குமரி மாவட்டம் குளச்சலைச் சேர்ந்த ஆண்டோ லெனின் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். 

அதில்," கடந்த அக்டோபர் மாதம் கியார்க் புயல் உருவானது அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே பல மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற நிலையில், பலர் கரை திரும்பிவிட்டாலும், இன்னும் பலர் கரை திரும்பவில்லை.  குறிப்பாக  ஜெர்மியா, லூர்து அன்னை, புனித மேரி, கார்மேல் மாதா,  பசிலிக்கா படகில் சென்ற 59 மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை.  மீனவ சங்கம் சார்பில் கடலில் சென்று தேடிய நிலையிலும் அவர்களை கண்டுபிடிக்க இயலவில்லை. 

ஆகவே,  கியார்க் புயலில் காணாமல் போன,  மீனவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் மற்றும் மீட்புக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி அமர்வு இது குறித்து தமிழக அரசு  விரிவான பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

click me!