பரபரப்பு!! சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்.. மயங்கி விழுந்த மருத்துவர்கள்.. அவசர சிகிச்சையில் அனுமதி..

By Thanalakshmi V  |  First Published Jul 2, 2022, 11:34 AM IST

சேலம் மாவட்டத்தில் மேட்டூரில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 அரசு மருத்துவர்கள் உட்பட 3 கைது செய்யப்பட்டுள்ளனர். மயங்கிய நிலையில் இருந்த அவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
 


மத்திய அரசு மருத்துவர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும், கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும், அரசாணை 354ஐ அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மேட்டூர் அருகே மறைந்த மருத்துவ சங்க தலைவர் லட்சுமி நரசிம்மன் நினைவிடத்தில் தொடர்ந்து 4 நாட்களாக போராடி நடத்தி வந்தனர்.

மேலும் படிக்க:தற்காலிக ஆசிரியர் நியமனம்.. நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்.. திருந்திய வழிக்காட்டுதல் வெளியீடு..

Tap to resize

Latest Videos

அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவின் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளை, பொருளாளர் மருத்துவர் நளினி, மறைந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவி திவ்யா ஆகிய மூவரும் கடந்த 29 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 4 ஆம் நாளான இன்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மூவரும், திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவர்களை உடனடியாக கைது செய்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

மேலும் படிக்க:

இந்நிலையில் அரசு மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இதுக்குறித்து பாமக நிறுவனர் ராம்தாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,” அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வரிடம் 5 முறை கோரிக்கை வைத்துள்ளனர். மருத்துவத்துறை அமைச்சரை 14 முறையும், செயலாளரை எண்ணற்ற முறையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை.

மேலும் படிக்க:சென்னையில் தொழில் முதலீட்டு மாநாடு.. ஓராண்டில் 2.25 லட்சம் பேருக்கு வேலை.. அமைச்சர் அறிவிப்பு..

அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. இக்கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பலமுறை நான் வலியுறுத்தியுள்ளேன். இந்த கோரிக்கைகள் நியாயமானவை என்பதை இன்றைய முதல்வரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதன் பிறகும் அவற்றை ஏற்க மறுப்பது நியாயமல்ல.மருத்துவர்களின் உண்ணாநிலை மூன்றாவது நாளாக இன்றும் நீடிக்கும் நிலையில், அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு அரசு மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சு நடத்தி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

click me!