தற்காலிக ஆசிரியர் நியமனம்.. நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்.. திருந்திய வழிக்காட்டுதல் வெளியீடு..

By Thanalakshmi V  |  First Published Jul 2, 2022, 10:45 AM IST

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜுலை 6 ஆம் தெதி வரை மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 
 


அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள 1331 பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்களே நியமனம் செய்ய பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்தது. இந்த உத்தரவு ரத்து செய்யக்கோரி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்தது. 

மேலும் படிக்க:குட்நியூஸ்.. கூட்டுறவு பணியாளர்களுக்கு இவ்வளவு சதவீத ஊதிய உயர்வா? மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஊழியர்கள்.!

Tap to resize

Latest Videos

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை திருத்திய வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே முன்னூரிமை கொடுத்து தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கலாம். இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரியவர்களை ஆசிரியர்களாக நியமிக்கலாம். முதுகலைபட்டதாரி ஆசிரியர் பணிக்கான TRB சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களையும் நியமிக்கலாம். 

மேலும் படிக்க:ஷாக்கிங் நியூஸ்.. ஓட்டலில் வாங்கிய சிக்கன் குழம்பில் பல்லி.. தொழிலாளி மருத்துவமனையில் அனுமதி..!

மேலும் பள்ளிக்கு அருகே மாவட்டத்திற்கு வசிக்கும் நபர்களுக்கு முன்னூரிமை அளித்து ஆசிரியர்களாக நியமிக்கலாம். திறமை அடிப்படையில் மட்டுமே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 1 ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு TET தேர்வு தாள் 2 -வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை ஆசிரியர் பதவிக்கு 2020ல் வெளியான அரசாணையின் படி தகுதி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடக்கும் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நாளை மறுநாள் முதல் ஜுலை 6 ஆம் தெதி வரை மாலை 5 வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்களின் பணி திருப்தி அளிக்காவிடில் அவர்கள் உடனே பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர் பணிநியமனத்திற்கு தேர்வுக்கான விண்ணப்பத்தாரர்களை வகுப்பறையில் பாடம் நடத்த வைத்து அவர்களது திறனை பரிசோதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி ஆணையர் அறிவித்துள்ளார்.
 
 

click me!