குட்நியூஸ்.. கூட்டுறவு பணியாளர்களுக்கு இவ்வளவு சதவீத ஊதிய உயர்வா? மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஊழியர்கள்.!

By vinoth kumar  |  First Published Jul 2, 2022, 8:14 AM IST

வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.


வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 112 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், 01.01.2020ஆம் தேதியிலிருந்து சம்பள உயர்வு குறித்த கோரிக்கையினை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா… 2,500-ஐ நெருங்கும் தினசரி பாதிப்பு!!

அவர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த அரசு, அவர்களுக்கான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தப்படும் ஊதிய உயர்வினை தற்போது அறிவித்துள்ளது. அதன்படி 01.01.2020 முதல் ஊதிய உயர்வு வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. சங்கங்களின் வகைப்பாட்டிற்கேற்ப 23% வரை ஊதியம் அதிகரித்து வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- பள்ளி வகுப்பறையிலேயே உல்லாசமாக இருந்த ஆசிரியர்கள்? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு..!

இந்த ஊதிய உயர்வினால் பணியாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,259 முதல் அதிகபட்சமாக ரூ.14,815 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். இவற்றின் மூலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பணிபுரிந்து வரும் 1,675 பணியாளர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க;- தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை.. உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு..

click me!