ஜெட் வேகத்தில் உயரும் கொரோனா பாதிப்பு.. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வர் அவசர ஆலோசனை.!

By vinoth kumar  |  First Published Jul 1, 2022, 7:52 AM IST

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததையடுத்து  கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 


தமிழகத்தில் ஒரே நாளில் 2,069 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததையடுத்து  கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனையடுத்து, கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அப்படி அணியாத பட்சத்தில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. 

Latest Videos

இதையும் படிங்க;- மீண்டும் திமுகவில் இணைகிறாரா பாஜக முக்கிய நிர்வாகி சரவணன்..! அவரே சொன்ன பரபரப்பு தகவல்

இந்நிலையில், தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதன்படி நேற்று சென்னையில் 909 பேருக்கும், செங்கல்பட்டு 352, காஞ்சிபுரம் 71, திருவள்ளூர் 100 பேருக்கு என தமிழகம் முழுவதும் 2,069 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் உயிரிழப்புகள் மட்டும் இதுவரை ஏற்படவில்லை. 

இதையும் படிங்க;- திடீர் விசிட் சென்ற முதலமைச்சர்.. பணியில் இல்லாமல் இருந்த அதிகாரி சஸ்பெண்ட்.. அடுத்து நடந்தது என்ன..?

எனவே கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையிலும், தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து  நடத்திடவும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அப்போது, கடும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள், முக்கிய அதிகாரிகள் பலர் பங்கேற்கின்றனர். 

இதையும் படிங்க;- மக்களே உஷார்.. தமிழகத்தில் கட்டுக்கடங்காத வேகத்தில் கொரோனா.. மீண்டும் பள்ளிகளில் இவையெல்லாம் கட்டாயம்.!

click me!