அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்குக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்குக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2002-2006ம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது.
இதையும் படிங்க;- AIADMK: சொத்துகுவிப்பு வழக்கில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !
undefined
மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது. சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க;- ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கத்திற்கு கொரோனாவா? அவரே கொடுத்த பரபரப்பு விளக்கம்..!
இதையும் படிங்க;- எஸ்.பி.வேலுமணிக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை உயர்நீதிமன்றம்..!
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது குறித்து விளக்கமளிக்க அமலாக்கப் பிரிவு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று ஜூலை 14ம் தேதி வரை அவகாசம் வழங்கிய நீதிபதிகள், அதுவரை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.