சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 270 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 270 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. அதேநேரத்தில் வெளிமாநிலங்களான டெல்லி, மஹாராட்டிரா, உள்ளிட்ட மாநிலங்களிலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இதையும் படியுங்கள்: எரிபொருள், உணவுப் பொருட்கள் விலை உயர்வு அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது: ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி
தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் அரசு மருத்துவமனை வளாகங்களில் மீண்டும் கொரோனா சிகிச்சை வார்டுகள் திறக்கப்பட்டுள்ளது, இதற்கு மருத்துவர்கள் செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் உடனே மருத்துவரின் ஆலோசனை பெற்று மருத்துமனைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பொது இடங்களில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் பதவியா? மத்திய அரசு கொடுத்த ஆஃபர்..!
பள்ளி கல்லூரி உள்ளிட்ட இடங்களில் முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 மாணவர்களுக்கு கொரோனா தோற்று அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் தோற்று உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவ கல்லூரியில் படிக்கும் 200 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 மாணவ-மாணவிகளுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இந்நிலையில் சென்னை மருத்துவ கல்லூரி மருத்து மாணவர்கள் 11 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 11 மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 272 மாணவிகளுக்கு கோரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 11 பேருக்கு தொற்று உறுதி ஆகியிரிப்பது குறிப்பிடதக்கது.