நெஞ்சுவலியால் காவல் நிலையத்தில் படுத்த ஆட்டோ டிரைவர்.. கடவுளாக உயிரை காப்பாற்றிய போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2022, 4:19 PM IST
Highlights

நெஞ்சுவலியால் உயிருக்கு போராடி, காவல் நிலையத்தில் படுத்த ஆட்டோ டிரைவரை அங்கிருந்த போக்குவரத்து போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நெஞ்சுவலியால் உயிருக்கு போராடி, காவல் நிலையத்தில் படுத்த ஆட்டோ டிரைவரை அங்கிருந்த போக்குவரத்து போலீசார் மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரிதமாக செயல்பட்டு உயிரைக் காப்பாற்றிய  போலீசாரை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

சென்னை கொடுங்கையூரில் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சுரேஷ்குமார் (53) கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகள் பத்தாம் வகுப்பும், மகன் எட்டாவது வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் கொடுங்கையூரில் இருந்து திருவான்மியூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சவாரிக்கு வந்தார் சுரேஷ்குமார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. வலி அதிகரித்தது ஆனால் எப்படியும் சமாளித்து சென்று விடலாம் என எண்ணி அவர் திருவான்மியூரில் இருந்து ஆட்டோவை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

இதையும் படியுங்கள்: படிங்க, பயன்படுத்துங்க! மூத்த குடிமக்களுக்கு இவ்வளவு வருமான வரிச் சலுகைகளா?

 

இதையும் படியுங்கள்: சென்னையில் இன்று மழை.. நாளை மறுநாள் 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்

ஆனால் அவருக்கு நெஞ்சு வலி தாங்க முடியவில்லை, வாகனத்தை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.அப்போது யாரிடம் உதவி கேட்பது என தெரியாமல் தவித்த அவர் எதிரே இருந்த அடையாறு போக்குவரத்து காவல் நிலையத்தை பார்த்ததும் உடனே ஆட்டோவில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அய்யா வலி தாங்கமுடியவில்லை, எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என கூறி கதறினார். அதைக்கண்ட போலீசார் நிலைமையை புரிந்து கொண்டனர், ஆட்டோ ஓட்டுனர் வலியால் துடித்தபடி இருந்தார். சுரேஷ்குமாரின் நிலையை கண்ட போக்குவரத்து போலீசார் சுதாரித்துக்கொண்டு அந்த வழியாக வந்த 108 ஆம்புலன்சில் நிறுத்தி சுரேஷ்குமாரை அம்புலன்சில் ஏற்றி உடனே ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

அப்போது மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு வந்ததால் அவர் காப்பாற்ற பட்டதாக கூறிய மருத்துவர்கள் போலீசார் செய்த உதவியால் ஆட்டோ ஓட்டுனர் உயிர் பிழைத்த தாக கூறினர். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக இதே போல ஹார்ட் அட்டாக் சுரேஷ்குமாருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் பிறகு தற்போது இரண்டாவது முறையாக நேற்று ஆர்டர் அட்டாக் ஏற்பட்டது. இந்நிலையில் உயிருக்கு போராடி காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த ஆட்டோ டிரைவரை துரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்த அடையாறு போக்குவரத்து போலீசாரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். 
 

click me!