தமிழகத்தில் தொடரும் கனமழை … 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது … 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை !!

By Selvanayagam PFirst Published Dec 3, 2019, 6:55 AM IST
Highlights

இன்றும், நாளையும்  தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ராமராதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை புதுக்கோட்டை, திருவாரூர், மற்றும் அரியலூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தற்போது வலுவாக உள்ளது . கடந்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்துள்ளது. 17 இடங்களில் கனமழை மூன்று இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளது அதிகபட்சமாக மேட்டுப்பாளையத்தில் 18 செ.மீ மழையும் குன்னூரில் 13 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. மேலும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.

அடுத்து வரும் 24மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். இன்றும் நாளையும்  தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய கூடும். 

கனமழை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் கடலூர், அரியலூர், பெரம்பலூர், மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

இந்நிலையில் தொடர் மழை காரணமாக ராமநாதபுரம், சிவகங்கை, பெரம்பலூர்,  திருவாருர் ,  தூத்துக்குடி , புதுக்கோட்டை, அரியலூர். மற்றும் . கடலூர் , சிதம்பரம், விருத்தாசல் கல்வி  மாவட்ட பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

click me!