கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

Published : Oct 08, 2022, 01:45 PM IST
கோவையில் கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்

சுருக்கம்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் போலி 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக 3 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் அந்த வீட்டை சோதனையிட்டனர். அப்போது அங்கு கட்டு கட்டாக 2000 ரூபாய் போலி நோட்டுகள் அட்டை பெட்டியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தென்காசியில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் பார்த்து குற்றவாளியை கைது செய்த காவல்துறை

இது தொடர்பாக அந்த  வீட்டில் இருந்த விருதுநகரை காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய  மூன்று பேரை  கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒன்பது அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2000 ரூபாய்  நோட்டுகள் மற்றும் இரண்டு கோவில் கலசம், லேப்டாப், 4 மொபைல் போன்களை காவல் துறையினர் பறிமுதல்  செய்தனர்.

என் தாத்தாவை விட எங்க அப்பா ரொம்ப டேஞ்சர்.. ப்ளாஸ்பேக்கை கூறி பாஜகவுக்கு பயம் காட்டும் உதயநிதி..!

மேலும் இது தொடர்பாக ஜடகோபால் என்ற நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இருடியம் இருப்பதாக சொல்லி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்துகள்.. காவு வாங்கப்பட்ட 9 உயிர்கள்.. அரசுக்கு அன்புமணி கடும் கண்டனம்
தமிழகத்தையே உலுக்கிய விபத்து.. அரசு பேருந்து ஓட்டுநர் மீது 4 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு!